பாடல் நயத்தல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற ஓமந்தை மாணவி -
குறித்த போட்டியில் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி சற்குணராஜா ஜீவநந்தினி (வயது 18) மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பாடல் நயத்தல் போட்டியில் முதலாமிடத்தினை பெற்றமைக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ்கள் என்பன அமைச்சர். எஸ்.பீ.நாவின்ன வழங்கி வைத்துள்ளார்.
சற்குணராஜா ஜீவநந்தினி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
மேலும், வறுமைக்கோட்டில் வாழ்ந்து வரும் இவர் விடா முயற்சியினால் சாதனையினை படைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாடல் நயத்தல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற ஓமந்தை மாணவி -
Reviewed by Author
on
March 07, 2018
Rating:

No comments:
Post a Comment