ரஷ்யா ஜனாதிபதி தேர்தல்: புடின் அமோக வெற்றி -
ரஷ்யாவில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது, இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தற்போதைய ஜனாதிபதியான புடினின் கட்சி பல வித்தியாசமான வியூகங்களை கையாண்டது.
குறிப்பாக தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாகின.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் புடின், 76 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புடினுக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டும், பெரும் பணக்காரருமான பாவல் குருடின் 12 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலக்சே நவால்னி தோல்வியை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்களில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கேசெனியா சோப்சக், 2 சதீவீதத்திற்கும் குறைவான வாக்குகளும், மூத்த தேசியவாதி விளாடிமிர் சிரினோஃப்ஸிகி 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதனை வியக்கத்தக்க வெற்றி என புடினின் பிரச்சாரக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 64 சதவிகித வாக்குகளை புடின் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா ஜனாதிபதி தேர்தல்: புடின் அமோக வெற்றி -
Reviewed by Author
on
March 19, 2018
Rating:
Reviewed by Author
on
March 19, 2018
Rating:

No comments:
Post a Comment