கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம் -தந்தையோடு சிறைக்கு செல்ல முயற்சித்த மகள்!
ஆயுள் தண்டனை கைதியாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மனைவியின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இதன்போது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டார்.
மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி கிரியை நிகழ்வில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் பொலிஸாரினால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும், மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.
ஆனந்த சுதாகர் 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தந்தையை பிரிந்த நிலையில், தற்போது தாயையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம் -தந்தையோடு சிறைக்கு செல்ல முயற்சித்த மகள்!
Reviewed by Author
on
March 19, 2018
Rating:

No comments:
Post a Comment