உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு: எந்த நாடு முதலிடம் தெரியுமா...
விமான முனையங்கள், பேக்கேஜ் டெலிவரி, உணவு விடுதிகள், தூய்மை பராமரிப்பு, சிறந்த கடைகள் கொண்ட விமான நிலையங்கள் என பல பிரிவுகளில் சுமார் ஒன்றரை கோடி பயணிகளிடம் Skytrax's நிறுவனம் கருத்துக் கேட்டது.
இதில் பல வகைகளில் பிரித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பயணிகள் அளித்த பதிலின் அடிப்படையில் உலகின் சிறந்த 10 விமானநிலையங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் சிங்கப்பூரின் Changi விமான நிலையம் தொடர்ந்து 6-வது ஆண்டாகத் தெரிவு செய்யப்பட்டு, முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதிக உயரம், 24 மணி நேர சினிமா, மொட்டை மாடி நீச்சல் குளம், பட்டாம்பூச்சி தோட்டம் என பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதே முதல் இடம் பிடித்தற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தென்கொரியாவின் Incheon சர்வதேச விமான நிலையமும், மூன்றாவதாக ஜப்பானின் Haneda சர்வதேச விமான நிலையமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவின் லண்டன் Heathrow விமானநிலையம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் சிறந்த முதல் 10 விமானநிலையங்களின் பட்டியல்
- Singapore Changi Airport
- Incheon International Airport
- Tokyo Haneda International Airport
- Hong Kong International Airport
- Hamad International Airport
- Munich Airport
- Chubu Centrair International Airport
- London Heathrow Airport
- Zurich Airport
- Frankfurt Airport
உலகின் சிறந்த முதல் 10 விமானநிலைய முனையங்கள்
- London Heathrow – T2
- Munich – T2
- Singapore Changi – T3
- London Heathrow – T5
- Tokyo Haneda – Int’l
- Madrid – T4
- Dubai – T3
- Paris CDG – T2-M
- Mumbai – T2
- Baku Heydar Aliyev Airport – T1
உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு: எந்த நாடு முதலிடம் தெரியுமா...
Reviewed by Author
on
March 23, 2018
Rating:
No comments:
Post a Comment