23 வயதில் ஒரு வயது குழந்தை போல் இருக்கும் மனிதர்:
ஹரியான் மாநிலத்தின் Hisar பகுதியைச் சேர்ந்த Manpreet Singh என்பவரே இது போன்று காணப்படுகிறார். கடந்த 1995-ஆம் ஆண்டு பிறந்த இவர், ஓராண்டுக்கு பின் வளர்ச்சி இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போன்று உள்ளார்.
5 கிலோ எடை மட்டுமே கொண்ட இவருக்கு Jaspreet மற்றும் Mangaldeep என இரண்டு பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு பெரிய முகம், வீங்கியிருக்கும் கண்கள் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசும் Manpreet Singh தன் பெற்றோர் இருக்கும் Mansa.வில் இருப்பதை விரும்பவில்லை, இதன் காரணமாக இவர் தன்னுடைய மாமா-அத்தை வீட்டில் Hisar-ல் தங்கி வருகிறார்.
ஏனெனில் பெற்றோருடன் இருக்கும் போது இது குறித்த கவலைகள் மற்றும் தனிமைகள் அழுகை என தொடர்ந்து துயரங்களை சந்ததித்தால், தன்னுடைய மாமா-அத்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இங்கு இருக்கும் போது, அவர்களின் குழந்தைகளுடன் விளையாடும் போது அவருக்கு இருக்கும் இந்த பிரச்சனையை மறந்துவிடுவதால், அவர் இங்கு தங்கி வருவதாக கூறப்படுகிறது.
இவரின் இந்த நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஒரு மரபணு பிரச்சனை காரணமாக ஏற்படும் அரிய வகை நோய் எனவும், உடல் முழுவதும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டு வந்தால் அவர் வளர்ச்சியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் உள்ளூர் மருத்துவர்கள் இது ஒரு அரிய வகை நோய் எனவும் எதனால் இந்த பிரச்சனை என்பது தெரியவில்லை என்று அவர்களிடம் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இதை சரி செய்ய வேண்டும் என்றால் 5,400 பவுண்ட் ஆகும் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு 500,000 என்பதால் Manpreet Singh-ன் அத்தை-மாமாம் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளனர்.
யாரிடமும் அதிகம் பேச விரும்பாத இவர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார். ஆனால் தினந்தோறும் சில நேரங்களில் யாரிடமும் சொல்லாமல் அழுது கொண்டே இருப்பாராம்.
இது குறித்து மாமா Karanvir Singh கூறுகையில், பார்ப்பதற்கு அவன் சின்ன குழந்தை போன்று இருப்பான். இவனை நாய்கள் போன்றவை பார்த்தால் கத்தும், இதனால் அவன் மிகவும் கவலைப்பட்ட்டு அழுவான், குழந்தைகளிடம் விளையாடும் போதும் மட்டுமே தன்னை மறந்து காணப்படுவான் என்று கூறியுள்ளார்.
அத்தையான Lakhwinder Kaur கூறுகையில், எங்களை அவன் அம்மா, அப்பா என்று தான் கூப்பிடுவான். பால் மற்றும் ரொட்டிகளையே அதிகம் விரும்பி உண்ணுவான்.
எங்களிடம் மட்டுமே அதிகம் பேசுவான், அதைத் தவிர மிமிக்கிரி போன்றவைகள் செய்வான், எங்களுடைய மகன் ஒருவன் தான் வேலைக்கு சென்று அனைவரையும் காப்பாற்றி வருவதால், பெரிய மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை, உள்ளூர் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டால் குணமாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதால், மற்றவர்களின் உதவியை நாடியிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் சில மருத்துவர்கள் இதை Laron Syndrome, என்ற அரிய வகை நோயின் தாக்கமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
23 வயதில் ஒரு வயது குழந்தை போல் இருக்கும் மனிதர்:
Reviewed by Author
on
April 27, 2018
Rating:
No comments:
Post a Comment