யாழில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணி படையினர் வசம் -
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இன்னும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணி முப்படையினரின் வசமுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இராணுவத்தினர் வசமிருந்த 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்னும் 3ஆயிரத்து 500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட உள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், காணி விடுவிக்கப்படாதுள்ளமை குறித்து சர்வதேச ரீதியில் கரிசனை வெளியிடப்பட்டு வருகிறது.
அத்துடன், காணி விடுவிப்பு குறித்து தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணி படையினர் வசம் -
Reviewed by Author
on
April 26, 2018
Rating:

No comments:
Post a Comment