அண்மைய செய்திகள்

recent
-

வீட்டில் இருக்கும் இந்த சமையலறை பொருள் உயிரையே பறிக்குமாம்!


நமது வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருளான கசகசாவில் ஆரோக்கியம் சார்ந்த விடயங்கள் இருப்பதுடன், உயிரையே பறிக்கும் ஆபத்து குணங்களும் அடங்கியுள்ளன.
கசகசாவினால் உண்டாகும் பக்க விளைவுகள், ஆபத்துகள் குறித்து இங்கு காண்போம்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கசகசாவிலிருந்து ஓப்பியம் தயாரிக்கப்படுகிறது. இதனை சுத்திகரிக்கும் போது, மிகவும் சக்தி வாய்ந்த ஒப்பியேட் மருந்துகளை உருவாக்க முடியும்.
இவை வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும். ஆனால், போதைக்காக தெருவோரங்களில் பயன்படுத்தப்படும் கசகசாவில் இருந்து ஹெராயின் தயாரிக்கப்படுகிறது.

கசகசாவில் இருந்து எடுக்கப்படும் ஒப்பியேட், தேநீருக்காக காய்ச்சும் போது அதில் மார்பின் மற்றும் கோடைன் அதிகரித்து போதையை தரும். இந்த மார்பினின் அளவு அதிகரித்தால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
எப்படியென்றால், நுரையீரலில் நீர் சேர்ந்து நுரையீரல் சுவர் வழியாக அது ரத்தத்தில் கலக்கும் போது, நமக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படும். இதனால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இதே போல் பல பக்க விளைவுகளையும் கசகசா உண்டாக்குகிறது. கசகசாவை சாப்பிட்டதும் கடுமையான வயிற்று வலி உண்டாகும். அதுவும், கசகசாவில் உள்ள ஒப்பியேட்டின் தாக்கம் குறைந்ததும் வலி இன்னும் தீவிரமடையும்.
மேலும், மறுநாள் காலையில் தலைவலியும் இதனால் ஏற்படும். கசகசாவை அதிகளவு உட்கொள்ளும்போது, அது நம்மை அதிகமாக உட்கொள்ளத் தூண்டும்.

ஏனெனில், ஒப்பியேட் அடிமைப் பழக்கத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. மருத்துவ பரிசோதனைகளுக்கும் செல்லும் முன் கசகசாவை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், மருத்துவ முடிவுகள் சரியாக இருக்காது.
தூக்கம் வருவதற்காக கசகசா தேநீர் பருகும்போது, குறைந்த அளவே எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், சமையலுக்கு பயன்படுத்தும் போது கசகசாவை நன்றாக கழுவி உபயோகப்படுத்த வேண்டும்.
பலவித விதைகள் சேர்த்து காய்ச்சும் கசகசா தேநீர், உயிரை பறிக்கும் அளவு ஆபத்தானது. எனவே, அதனை தவிர்ப்பது நல்லது. எனவே கசகசா உணவு, கசகசா தேநீரை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.


வீட்டில் இருக்கும் இந்த சமையலறை பொருள் உயிரையே பறிக்குமாம்! Reviewed by Author on April 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.