மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் மீட்பு-(படம்)
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த பீடி மூட்டைகளை இன்று புதன் கிழமை(25) காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியல் இன்று புதன் கிழமை(25) அதிகாலை மூட்டை மூட்டைகளாக நடுக்கடலிலும் கடற்கரை ஓரத்திலும் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கிய பெறுமதி வாய்ந்த சுமார் 25 மூட்டை உயர் ரக பீடி இலைகளை மீட்டுள்ளனர்.
மேலும் நடுக்கடலில் மிதந்து வரும் மூட்டைகளை மெரைன் பொலிஸார் மீனவர்களின் உதவியுடன் மீட்கும் முயற்சியல் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள் உயர் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது நடுக்கடலில் படகு மூழ்கியதால் மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கடற்படையினரோ அல்லது கடலோரகாவல் படையினரோ ரோந்துப்பணியின் போது படகில் மூட்டைகள் இருந்தது கன்டுபிடிக்கப்பட்டு படகை பறிமுதல் செய்ய முயற்ச்சிக்கும் போது கடலில் தள்ளிவிட்டு படகுடன் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர் விசரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் மீட்பு-(படம்)
Reviewed by Author
on
April 25, 2018
Rating:

No comments:
Post a Comment