மன்னாரில் பட்டதாரி பயிலுனர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட/அழைக்கப்படாத பட்டதாரிகளின் கவனத்துக்கு......VIDEO
மன்னாரில் பலருக்கு நேர்முகத்துக்கான கடிதங்கள் கிடைக்காமையினாலும் பதிவுகள் ஒழுங்காக பதியப்படாமலும், இருந்தால் பட்டதாரிகள் பெரும்குழப்பத்திற்கும் மனவுளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர் இவர்களின் குழப்பத்திற்கு தீர்வுகாணும் பொருட்டு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.குணபாலன் அவர்களிடம் வினவியபோது.
எமது அலுவலகத்தில் பதியப்பட்ட அனைத்து பட்டதாரிகளின் விபரங்களை அமைச்சுக்குஅனுப்பிவைத்திருந்தோம் அத்தோடு ONLINE மூலம் பதிவுகளை மேற்கொண்ட பட்டதாரிகளும் உள்ளடங்களாக சுமார்515 பட்டதாரிகளுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைப்புக்கடிதங்கள் வந்துளளது இருப்பினும் பலருக்கு கடிதங்களெதுவும் வரவில்லை என முறைப்பாடு வந்துள்ளது .
அவர்கள் ONLINE மூலம் பதியப்படாமலும் விடுபட்டிருக்கலாம் இந்த விடையம் தொடர்பாக என்னிடம் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் வினவியபோது விளக்கமாக சொல்லியுள்ளேன் விடுபட்டவர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு உரிய வழிவகையை மேற்கொள்வதாகவும் பிரதமர் அவர்களிடம் பரிந்துரைப்பதாக சொன்னார்.
பட்டதாரிகள் தொடர்பாக கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்தங்களின் நிலைப்பாடு என்ன என்று வினவியபோது....
மன்னார் மாவட்டத்தில் கச்சேரியில் பதிவுள்ள சுமார் 790 பட்டதாரிகள் உள்ளவர்களில் முதல் கட்டமாக சுமார் 515 பட்டதாரிகளுக்கு 16-20 வரை நேர்முகத்தேர்வுகள் நடைபெறும். அத்தோடு விடுபட்ட சுமார் 275 பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இரண்டாம் கட்டமாக நடைபெறும் இவ்விடையம் தொடர்பாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவர்களிடம் கதைத்தபோது விடுபட்ட பட்டதாரிகளுக்கும் நேர்முகத்தேர்வு நடைபெற்று அவர்களுக்கும் நியமனங்களும் வழங்கப்படும் என வாக்களித்துள்ளார். .
முதல் கட்டம் நடைபெறும் 515 பட்டதாரிகளுக்குமான நேர்முகத்தேர்வும்
இரண்டாம் கட்ட நடைபெறும் 275 பட்டதாரிகளுக்குமான நேர்முகத்தேர்வும் இடம் பெற்று பிரதமர் அமைச்சுஅலுவலகத்திலிருந்து எழுத்து மூலமாகா அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 790 பட்டதாரிகளும் ஒரே நேரத்தில் 01- 06- 2018 நியமனங்கள் வழங்கப்படும் என்பது மகிழ்ச்சியான செய்தியே.......................
பட்டதாரி பயிலுனர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட/அழைக்கப்படாத பட்டதாரிகளின் கவனத்துக்கு
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் கடந்த ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், அதற்கான நேர்முகப்பரீட்சைக்கு பட்டதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 16 முதல் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் சில விளக்கங்களை விண்ணப்பதாரிகளுக்கு வழங்குவது நல்லது என்று கருதுகிறோம்
01. பயிற்சிக்காலம் இரண்டு ஆண்டுகளாகவும், பயிற்சிக்காலக் கொடுப்பனவாக Rs. 20,000.00 உம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
02. விண்ணப்பிக்காத/விண்ணப்பித்தும் இணையத்தில் பெயர் இல்லாத/கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை. பின்வரும் விபரங்களை உள்ளடக்கி சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் உங்கள் மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபரிடம் விரைவாகக் கையளிக்க முடியும். உங்களுக்குப் பொருத்தமான திகதியை அரசாங்க அதிபர் அறிவிப்பார்.
01. Full Name
02. Date of Birth
03. NIC No
04. Gender
05. Permenant Address
06. GN Division
07. DS Division
08. District
09. Contact TP
Educational Qualification
10. University
11. Special/General/Class
12. Subjects
13. Effective Date of the Degree
14. Extra Curricular Activities
15. Marital Status
16. Two Refrees (Name & Contact No)
17. Siganture & Date
03. நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ளும் பட்டதாரிகளின் மொழித்தேர்ச்சி, கணினி அறிவு, மேலதிக கல்வித்தகைமைகள், புறக்கிருத்திய செயல்பாடுகளின் சான்றிதழ்கள் மற்றும் நேர்முகப்பரீட்சையில் காண்பிக்கும் திறமை என்பன பரீட்சிக்கப்படும். இவைகளுக்கு தனித்தனியாக இருபது புள்ளிகள் வீதம் நூறு புள்ளிகளுக்கு கணிப்பீடு இடம்பெறும். ஆதலால், பட்டச் சான்றிதழ் உட்பட முடியுமான அனைத்துச் சான்றிதழ்களின் மூலப்பிரதிகளையும், நகல் பிரதிகளையும் கொண்டு செல்லுங்கள்.
04. இதில் 31.12.2016 இற்கு முன் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றாலும் ஏனையவர்களும் திறமையாக நேர்முகப்பரீட்சையில் செயல்படுங்கள்.
05. கடிதத்தில் குறிப்பிடப்பட்டது போல பட்டச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், அடையாள அட்டை, வதிவிடத்தை உறுதிப்படுத்தும் பிரதேச செயலாளரின் அறிக்கை, வேலையற்ற பட்டதாரி என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் என்பன கட்டாயமானதாகும்.
06. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மொழித்தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்கள், கணினி அறிவு தொடர்பான சான்றிதழ்கள் என்பன உங்களிடம் இருந்தால் கட்டாயம் கொண்டு செல்லவும்.
07. இலங்கைக்கு வெளியே அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறப்பட்ட பட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தலுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
08. புள்ளிகளின் அடிப்படையிலேயே பட்டதாரிகள் தெரிவு இடம்பெறவுள்ளதால் உங்கள் அதிகபட்ச திறமையை காண்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்.
இந்நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள அனைத்துப் பட்டதாரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
515 பட்டதாரிகளின் விபரங்களினை விளம்பரப்பலகையிபார்வையிடலாம்
மீண்டும் வாழ்த்துக்கள்,
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

Reviewed by Author
on
April 13, 2018
Rating:

No comments:
Post a Comment