வவுனியாவில் நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியொன்றில் இன்று (13.04.2018) மாலை 3.00 மணியளவில் இளைஞனோருவனின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியொன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இளைஞனின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
April 13, 2018
Rating:

No comments:
Post a Comment