மன்னாரில் பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகிய நிலையில் 5 வருடங்களின் பின் கைது-(படம்)
மன்னாரில் பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 5 வருடங்களின் பின்னர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை செட்டிக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று புதன் கிழமை (18) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் துஸ்பிரையேக சம்பவம் இடம் பெற்றமை தொடர்பில் பாதீக்கப்பட்டவர்களினால் அன்றைய தினம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் பெண்கள்,சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது சந்தேக நபரை கைது செய்ய மன்னார் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த நபர் தலை மறைவாகியுள்ளார்.
-இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த சந்தேக நபரை கைது செய்ய மன்னார் மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.முனசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வந்த துரித நடவடிக்கையின் காரணமாக குறித்த நபர் 5 வருடங்களின் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் செட்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை(17) கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.
-கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை விசாரனைக்கு உற்படுத்திய நிலையில் நேற்று புதன் கிழமை(18) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகிய நிலையில் 5 வருடங்களின் பின் கைது-(படம்)
Reviewed by Author
on
April 20, 2018
Rating:

No comments:
Post a Comment