சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கும் ஜேர்மனி -
ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கும் சிரிய அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ள நாடுகளுக்கும் வழங்க இருப்பதாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் இன்று அறிவித்தார்.
மனிதநேய உதவிகளை மட்டுமே நம்பி சிரியாவில் மட்டுமே 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக சிரியாவுக்கு மனிதநேய உதவிகளைக் கோரும் ஒரு நிகழ்ச்சிக்காக Brussels வந்த மாஸ் கூறினார்.
சிரிய மக்களை நாம் அப்படியே விட்டு விட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த முறை ஐக்கிய நாடுகள் அமைப்பு சிரியாவுக்கான உதவிகளை முன்வைத்தபோது அதிக தொகையை வழங்கிய நாடு ஜேர்மனிதான், அது 4.5 பில்லியன் யூரோக்களை வழங்கியது.
ஏழு ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்றுவரும் உள் நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிர் பிழைக்க பல மில்லியன் சிரியர்கள் துருக்கி, லெபனான், ஜோர்டான் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கும் ஜேர்மனி -
Reviewed by Author
on
April 26, 2018
Rating:
No comments:
Post a Comment