அண்மைய செய்திகள்

recent
-

சமூக-பொருளாதார மாற்றத்திற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து உழையுங்கள்.....


கிராமிய சமூகமட்ட அமைப்புத் தலைவர்களுக்கான கருத்தமர்வில்
கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி M.ஜெயபாலன் அடிகளார்.


இன்று 11.04.2018 காலை 10.00 மணி தொடக்கம்  மாலை 3.00 மணிவரை கறிற்ராஸ்-வாழ்வுதய மண்டபத்தில் வாழ்வுதய கிராமிய சமூக மட்ட அமைப்பு தலைவர்களுக்கான வாழ்வாதார திறன் வளர்ப்பு கருத்தமர்வு இடம் பெற்றது.
அதில் கறிற்ராஸ் -வாழ்வுதய இயக்குனர் அருட்பணி M.ஜெயபாலன் அடிகளார் உரையாற்றும்போது. நாம் எமது தனிமனித வாழ்விலும் முன்னேறி ஏனையவர்களையும் முன்னேற்றும் மனநிலையில் வாழவேண்டும்.
நமது தலைமைத்துவ பண்புகளை கூட்டுப்பொறுப்புடன் வளர்த்துக்கொண்டு சுழற்சிமுறையில் நிர்வாக பொறுப்பேற்று பொதுநிலை நோக்குடன் செயற்படவேண்டும்.

 கடந்த இருபது வருடங்களுக்குமுன் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் மன்னார் கீரி கிராமத்தில் “வளர்பிறை” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கிராமியமட்ட சிறுகுழு போர்க்கால சூழ்நிலையிலும் திழைத்து சுயமாக இயங்கி பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வருவதை அதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இக்குழு வளர்ச்சிக்கு அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டமையே காரணமாக அமைகின்றது. ஆகவே ஏனையவர்களையும் குழுக்களில் உள்வாங்கி நல்மனநிலையில் பொதுநோக்கினை மையமாகக் கொண்டு செயற்பட வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.
இப்பயிற்சிப் பட்டறையை வளவாளர் திரு. சிவராசா.
Sociology (MA)உளவளத் துணையாளர் அவர்கள் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.

இதில் 60 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். குறிப்பாக ஆறு இலக்கு கிராமங்களாகிய
  • செம்மண்தீவு
  • சாந்திபுரம்
  • பறப்பாங்கண்டல்
  • சாளாம்பன்
  • கன்னாட்டி
  • பறன்நட்டகல்(வவுனியா) போன்ற இடங்களில் இருந்து கிராமிய சமூகமட்ட பெண்கள் அமைப்புத் தலைவர்களே இதில் கலந்துகொண்டார்கள். இக்குழுக்களுக்கு மாதாந்தம் சமூகää பொருளாதாரம் தொடர்பான விழிப்புணர்ச்சிப் பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.









சமூக-பொருளாதார மாற்றத்திற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து உழையுங்கள்..... Reviewed by Author on April 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.