ஹாலிவுட் பிரபலங்களுடன் சர்வதேச அளவில் இடம் பிடிக்கும் தனுஷ்!
நடிகர் தனுஷ் ஒரு நடிகராக தன்னை நிரூபித்து காட்டிவிட்டார். ஆரம்பத்தில் அவர் படத்திற்கு வந்தபோது அவரின் உருவத்தை வைத்து பலரும் அவரை விமர்சனம் செய்தார்கள்.
அவர்களுக்கெல்லாம் தனுஷின் வளர்ச்சியை பார்த்து ஆச்சர்யமே. மேலும் அவர் தயாரிப்பாளராகவும், ஒரு பாடகராகவும், இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி காட்டிவிட்டார்.
மேலும் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். அவர் ஆங்கிலத்தில் நடித்துள்ள The Extraordinary Journey Of Fakir படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வரும் மே 11 ல் வெளியிடுகிறார்களாம்.
அதோடு தனுஷ் பத்திரிக்கையாளர்களுடன் கேள்வி, பதில் நேரத்தில் கலந்துரையாடுகிறாராம். வரும் 30 ம் தேதி இப்படம் பிரான்ஸ் நாட்டில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் ரிலீஸ்கான பிளான் நடைபெற்று வருகிறதாம்.
மேலும் இந்த படத்திற்காக அவர் சர்வதேச அளவில் நடைபெறவுள்ள Canes Festival 2018 ல் படக்குழுவோடு கலந்துகொள்கிறாராம்.
ஹாலிவுட் பிரபலங்களுடன் சர்வதேச அளவில் இடம் பிடிக்கும் தனுஷ்!
Reviewed by Author
on
April 27, 2018
Rating:

No comments:
Post a Comment