பிரச்சினையை தீர்க்காவிட்டால் சம்பந்தர் ஐயா என்ன செய்வார்?
அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்க்கா விட்டால் உரிய தீர்வை நாமே தேடிக் கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் கூறியுள்ளார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் அவர்கள் ஆற்றிய இந்த உரை பல்வேறு கோணங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.
அதில் முக்கியமானது இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்று சம்பந்தர் ஐயா நம்புகிறார்.
அவ்வாறு தீர்வு தராவிட்டாலும் தீர்வைப் பெறுவதற்கான வியூகம் தன்னிடம் இருப்ப தைப் போலவும் அவர் காட்டியுள்ளார்.
இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது நல்லாட்சி அரசாங்கம் இதுவரை தமிழ் மக்களின் முதன்மைப் பிரச்சினைகள் பற்றி இம்மியும் சிந்திக்கவில்லை.
அதில் காணாமல்போனவர்களின் விவ காரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம், தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ள படையினரின் நிலக்கபளீகரம் என்பன முக்கியமானவை.
இதுவிடயத்தில் நல்லாட்சியின் நடவடிக்கை எதுவுமில்லை.
அதிலும் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக அவரின் குழந்தைகளிடம் ஜனாதிபதி உறுதியளித்தும் அதுகூட நடக்கவில்லை.
ஆக, நல்லாட்சி பதவியேற்று காலம் கடக் கிறதே தவிர, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்ட தாக இல்லை.
இதுதவிர, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகக் கூட்டமைப்பு வாக்களித்தது.
அதேசமயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இரண்டாயிரம் பெளத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் ஸ்தாபிப்பது என குறிப்பிட்டிருந்தது.
இத்தகையதொரு தேர்தல் விஞ்ஞாபனத் தின் தூண்டுதல் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பது தொடர்பில் சிங்கள மாணவர்கள் விடாப்பிடியாக நின்றனர்.
இதனால் தமிழ் - சிங்கள மாணவர்களி டையே மிகப்பெரும் மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருந்தது.
இவற்றுக்கு அப்பால், இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி இந்து ஆலயங்களைத் தமதாக்குகின்ற நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என சம்பந்தர் நம்புவது அவர் குறித்த சந் தேகங்களை ஏற்படுத்தும் அதேவேளை, அவர் கள் தராவிட்டால் நாங்கள் தீர்வைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறுவதானது,
சம்பந்தர் ஐயா தன் வயோதிபத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறாரா? அல்லது மாபெரும் போராட்ட வியூகம் அவரிடம் இருக்கிறதா? என்பதுதான் புரியாமல் உள்ளது.
-VALAMPURI-

Reviewed by Author
on
April 27, 2018
Rating:

No comments:
Post a Comment