அண்மைய செய்திகள்

recent
-

கல்வி கற்பதற்கு வழி சொல்லிக் கொடுங்கள்...

உடனடியாக வருமானம் கிடைக்க வேண்டு மாயின் மீன்பிடிக்க வேண்டும். மூன்று மாதங் களின் பின் வருமானம் கிடைக்க வேண்டு மாயின் நெல் விதைக்க வேண்டும். நூறு வரு டங்களின் பின்னர் வருமானம் பெற வேண்டு மாயின் பனை வைக்க வேண்டும். ஒரு சந்ததிக் குப்பின் நன்மை பெறவேண்டுமாயின் கல்வி கற்பிக்க வேண்டும் என்பது சீனப் பழமொழி.

கல்வி என்பது கற்றவரை மட்டுமன்றி மற்ற வரையும் வாழ வைக்கும்.
எனவே மனித சமூகத்தின் எழுச்சியும் உயர்ச்சியும் கல்வியில்தான் தங்கியுள்ளது.
இன்று எங்கள் மத்தியில் பலரையும் பார்க் கின்றோம். இதில் ஒரு தரப்பினர் உழைக்கின்ற வருமானத்தில் பெரும் பகுதியை மதுவுக்காக செலவிடுகின்றனர்.
இதனால் அந்தக் குடும்பங்கள் வறுமை யில் வாடுவதை அவதானிக்க முடிகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தகைய குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வறுமை நிலையில் இருப் பதுடன் பாடசாலைகளுக்குச் செல்கின்றபோது, சீருடைகளைக்கூட தூய்மையாக அணிய முடி யாதவர்களாக இருக்கின்றனர்.

தந்தை மதுபோதைக்கு அடிமையாக, வீட் டில் நிலவும் வறுமையைப் போக்குவதற்காக பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு கூலித்தொழிலுக்குப் பிள்ளைகள் செல்கின்ற பரிதாபம் ஏற்படுகின்றது.

இவ்வாறு வீட்டின் வறுமைக்குத் தீர்வு காண்பதற்காக கூலித் தொழிலுக்குச் சென்ற பிள்ளைகள் பிழையான கூட்டத்துடன் பழகி அவர்களும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகுவது டன் பெறுமதிமிக்க மோட்டார் சைக்கிள்களை கடன் அடிப்படையில் பெற்று வேகக்கட்டுப்பாடி ன்றி மோட்டார் சைக்கிளை ஓடி எல்லாவற் றையும் நிர்மூலமாக்குகின்ற ஒரு சூழ்நிலை க்கு வந்துவிடுகின்றனர். இத்தகைய அவலம் தீர வேண்டும்.

பொறுப்பான பிள்ளைகள் தங்கள் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக் கின்றனராயினும் தவறான பழக்கவழக்கமு டைய கூட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதென்பது கடினமாகவே உள்ளது.
எனவே கல்வி ஒன்றினூடாகவே எமது சமூ கத்தில் இருக்கக்கூடிய பிழையான பழக்க வழக்கங்களை நீக்க முடியும்.
அந்தவகையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் க.பொ.த உயர்தரத்தில் கற்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இப்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள் ளது.

2016ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்திய டைய முடியாமல்போன மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் கற்பதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டுள்ளது.

எனவே இச்சந்தர்ப்பத்தை சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகவலை சம்பந்தப்பட்ட மாணவர்களுக் குத் தெரியப்படுத்துவதை மக்கள் சமூகம் ஒரு அறக்கடமையாகச் செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்தால் அது பெரும் புண்ணியமாகும்.
valampuri


கல்வி கற்பதற்கு வழி சொல்லிக் கொடுங்கள்... Reviewed by Author on April 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.