சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா?
உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான்.
- வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக்கவைத்துவிடும்.
- சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம்.
சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா?
Reviewed by Author
on
April 28, 2018
Rating:

No comments:
Post a Comment