தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன்மொழிவை அழித்தால்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதி ரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பன் ரெண்டு மணித்தியாலங்கள் விவாதம் நடத்து வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவாதத்தின் இறுதியில் நம்பிக்கையில் லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம் பெறும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தப்பிப் பிழைப் பாரா? என்பது அதில் முடிவு செய்யப்படும்.
இது ஒருபுறம் இருக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின்போது, பிரத மர் ரணில் விக்கிரமசிங்க மீது ஏகப்பட்ட குற் றச்சாட்டுக்களை கூட்டு எதிரணி முன்வைக்கும்.
இதனை முறியடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துரைக்கும். இவை இன்றைய பாராளுமன்ற நிகழ்வில் நடைபெற இருப்பவை.
பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்குமா? அல்லது எதிர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதற்கு அப்பால்,
ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோற்க வேண்டி ஏற்பட் டால் அது ஒரு வகையான சிக்கலை உருவாக் கும்.
மாறாக, ரணில் விக்கிரமசிங்க வென்றுவிட் டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் எதிர்கால ஆட்சிக்காலம் மிகப்பெரும் குழப்பங் களையும் சச்சரவுகளையும் உண்டு பண்ணும்.
சிலவேளை ஜனாதிபதி மைத்திரி அதிரடி யான சில முடிவுகளை அரசியல்புலத்தில் எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்.
எது எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கப்போவது நிறுதிட்டமான உண்மை.
இந்த உண்மையை கூட்டமைப்பு இரகசிய மாக வைத்திருக்கிறதேயன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு பிரதமர் ரணிலை கூட்டமைப்பு ஆதரிக்கும்போது, உள்ளூராட்சி சபைத் தேர்த லின்போது ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த தேர் தல் விஞ்ஞாபனத்தையும் கூட்டமைப்பு ஆத ரிப்பதாகப் பொருள்படும்.
அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் இரண் டாயிரம் விகாரைகளை அமைப்பது என்ற ஐக் கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத் துக்கு கூட்டமைப்பு தனது ஆதரவைத் தெரி விப்பதாகவும் நிலைமை மாறும்.
ஆக, தேர்தல் விஞ்ஞாபனத்தில் விதந்து ரைத்த இரண்டாயிரம் விகாரைகள் அமைத் தல் என்ற விடயத்தை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை கூட்டமைப்பு முன்வைக்காவிட் டால், பிரதமருக்கு எய்த நாகாஸ்திரத்தை கூட்டமைப்பு தன் தலையில் வாங்கிக் கொள்வ தாக நிலைமை முடியும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன்மொழிவை அழித்தால்...
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment