வரலாற்றிலேயே மட்டக்களப்பு மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு !
லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு – கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வரலாற்றிலேயே பொதுநலவய மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் மட்டக்களப்பு பெண் என்ற பெருமையை தாட்சாயிணி நிமலேந்திரன் பெற்றுள்ளார்.
வோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட பலர் தாட்சாயிணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பயணம் குறித்து ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.
வரலாற்றிலேயே மட்டக்களப்பு மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு !
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment