யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !
யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் ஒன்று உருக் குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று மாலை சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
முகம் சிதைவடைந்துள்ளதால் அடையாளம் காண்பது கடினமாகவுள்ளதாகவும், மீட்கப்பட்ட சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, சடலம் கம்பர்மலையைச் சேரந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment