அரிய பொக்கிஷங்களுடன் பசிபிக் பெருங்கடலில் தீவு கண்டுபிடிப்பு: அதன் மதிப்பு என்ன தெரியுமா? -
ஜப்பான் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த தீவின் தற்போதைய மதிப்பு சுமார் 360 பில்லியன் பவுண்ட்ஸ் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Marcus தீவு என பரவலாக அறியப்படும் Minami-Torishima தீவிலேயே ஆய்வாளர்களால் அள்ள அள்ள குறையாத அரிய வகை பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பானது ஜப்பானுக்கு கண்டிப்பாக திருப்புமுனையாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவில் சுமார் 16 மில்லியன் டன் அரியவகை உலோகங்கள் கொட்டிக் கிடப்பதாக ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த உலோகங்களால் உலகமெங்கும் ஹைடெக் தயாரிப்புகள் பல உருவாக்க முடியும் எனவும் ஜப்பானிய நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், ரேடார் சாதனங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் என பலவற்றையும் குறித்த தீவில் இருந்து கிடைக்கும் உலோகங்களால் உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட அரிய உலோகங்களில் ஒன்று Yttrium. இதன் தற்போதை சந்தை மதிப்பானது பவுண்ட் ஒன்றுக்கு 3,400 டொலராகும்.Yttrium உலோகத்தால் மொபைல்போன் திரைகள் மற்றும் கமெரா லென்ஸ்கள் தயாரிக்கலாம்.
அரிய பொக்கிஷங்களுடன் பசிபிக் பெருங்கடலில் தீவு கண்டுபிடிப்பு: அதன் மதிப்பு என்ன தெரியுமா? -
Reviewed by Author
on
April 20, 2018
Rating:

No comments:
Post a Comment