கட்சியின் கோட்பாட்டுக்கு மாறாக செயல்பட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரிடம் விளக்கம் கோரி கட்சி கடிதம் அனுப்பி வைப்பு-(படம்)
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் றொஜஸ் ஸ்றலினிடம் விளக்கம் கோரி சனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று (12) வியாழக்கிழமை எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடித்தில்,,,
நானாட்டான் பிரதேச சபை தலைவர்,உப தலைவர் தெரிவுகள் நேற்று புதன் கிழமை(11) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த தெரிவுகளில் எமது கட்சியின் தீர்மானத்தை மீறி தலைவர் தெரிவுக்கு போட்டியிட்டுள்ளீர்கள்.
-நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கக் கூடாது என தங்களுக்கு பல முறை வலியுறுத்தியுள்ளோம்.
எனவே எமது அங்கத்தவர்கள் சகல இடங்களிலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை. எனும் எமது தீர்மானத்தையும் கட்சியின் கோட்பாட்டுக்கு மாறாக மீறியுள்ளீர்கள்.
ஆகவே ஏன் உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து உங்களை உறுப்புரிமையில் இருந்து ஏன் நீக்க கூடாது? என்பதற்கு ஏழு நாட்களுக்குள் விளக்கம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சியில் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரான அன்ரன் றொஜஸ் ஸ்றலின் நேற்று புதன் கிழமை (11) இடம் பெற்ற நானாட்டான் பிரதேச சபை தலைவர் தெரிவில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தலைவர் தெரிவிற்கு போட்டியிட்டுள்ளார்.
கட்சியின் கோட்பாடுகளையும்,நிபந்தனைகளையும் மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு அமைவாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் முதற்கட்டமாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் கோட்பாட்டுக்கு மாறாக செயல்பட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரிடம் விளக்கம் கோரி கட்சி கடிதம் அனுப்பி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
April 13, 2018
Rating:

No comments:
Post a Comment