இலங்கை நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்! விரைவில் புதிய வரைப்படம் -
துறைமுக நகர திட்டம் காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு நகரின் வரைப்படத்தை அச்சிடும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் பூர்த்தியாகும் என இலங்கை நில அளவீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் காரணமாக நாட்டின் நிலப்பரப்பின் அளவு 2.69 சதுர கிலோமீற்றர் அதிகரித்துள்ளதாக நில அளவையாளர் ஜீ.என்.பீ.உதய காந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய வரைப்படத்திற்கு அமைய சிலாபம் கடற்கரையின் அளவில் குறைந்துள்ளதை காணமுடிகிறது. தெற்கிலும், கிழக்கிலும் கரையோரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களுடன் முழுமையான இலங்கையின் வரைப்படம் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் எனவும் உதயகாந்த குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்! விரைவில் புதிய வரைப்படம் -
Reviewed by Author
on
April 22, 2018
Rating:

No comments:
Post a Comment