இலங்கை விவகாரம்! பிரித்தானிய அரசுக்கு தமிழர்கள் அழுத்தம்!
இலங்கை அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு தொடர்பில் சர்வதேசநீதிமன்றத்தில் விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியும், இலங்கைக்கு பிரித்தானியஅரசு மேற்கொள்ளும் ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரியும் பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள்தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் இன்று பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள்சிலர் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிக்கை ஒன்றினைக் கையளித்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் தொழில்கட்சியின் கேம்பிறிச் பாராளமன்ற உறுப்பினர் Mr.DanielZeichner அவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த சந்திப்புபிரித்தானியாவில் உள்ள Clay Farm centre ,Hobson Square Trumpington,Cambridge இடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தமிழர் பகுதியில் தொடர்ந்து இராணுவ மயமாக்கல் போரின் பின்னர்இலங்கைக்கு பிரித்தானியா அரசு மேற்கொண்டு வரும் ஆயுத விற்பனையினைநிறுத்தக் கோரியும் அடங்கிய ஆவணம் ஒன்றினை கையளித்துள்ளார்கள்.
இதன்போது பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் தான் இவ்விடயத்தினைபாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் உரிய நடவடிக்கைகளுக்கு அழுத்தம்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம்! பிரித்தானிய அரசுக்கு தமிழர்கள் அழுத்தம்!
Reviewed by Author
on
April 09, 2018
Rating:

No comments:
Post a Comment