ஜெர்மனியில் வசிக்கும் 13 விதமான அமெரிக்கர்கள் -
மாணவர் பரிமாற்றம்
இங்கு கிடைக்கும் மலிவான மது மற்றும் பியர் வகைகளுக்காக இவர்கள் ஆர்வத்தோடு ஜெர்மனி வருகின்றனர்.
முனிச்சில் உள்ள பியர் தோட்டங்களும் இவர்களின் ஜெர்மனி வருகைக்கான காரணங்களில் ஒன்று.
படைப்பார்வம் மிகுந்தவர்கள்
அவர்களுக்குள் இருக்கும் ஒரு ஓவியர், நடன கலைஞர் அல்லது கிராபிக் டிசைனர்களை கண்டு பிடித்து தர ஜெர்மனி ஒரு நல்ல இடமாக திகழ்கிறது.
இவர்களை கண்டுபிடிப்பதும் வெகு சுலபம், மக்கள் நிறைந்த இடங்களில் கருப்பு நிற உடைகள் அணிந்து தங்கள் கலைக் கனவுகளை யாருடனாவது பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.
ப்ரூக்ளின் நவீன மோகம் கொண்டவர்கள்
இந்த அமெரிக்க ப்ரூக்ளின் ஹிப்ஸ்டர்களை வெகு எளிதாக அடையாளம் காண முடியும். 90களின் இசை ஆல்ப சாயலில் உடையும் , முடி அமைப்பும் வைத்திருப்பார்கள். இருப்பினும் வினைலின் புதிய விடியோக்கள் இவர்கள் கையில் தவழும். தங்களது சொந்த சிகரெட்டுகளை தாங்களே சுருட்டியபடி ரயில்களில் பயணிப்பது இவர்கள் வழக்கம்.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அதிகமாக காணப்படும் இவர்கள் வாரம்தோறும் புத்தாபெஸ்ட்டிற்கு பயணம் செய்து "நான் கிழக்கில் இருப்பதை போல உணர்கிறேன்" என்று பெருமையாக கூறி கொள்வார்கள்.
கௌரவ அமெரிக்கர்கள்
பேர்லினின் க்ருஸ்ஸ்பர்க் மற்றும் மியூனிக்கின் ஸ்வாப்பிங் போன்ற இடங்களில் மாதத்திற்கு 900 யூரோக்களை ஒரு சிறிய சதுர அடிக்கு வாடகையாக கொடுத்து விட்டு வாவ் ஜெர்மனி எவ்வளவு மலிவான நகரம் என்று மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அதிக நாட்கள் ஜெர்மனியில் தங்காத இவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிய பின் நண்பர்களிடம் "சீக்கிரம் பணம் சேர்த்து " மீண்டும் ஜெர்மனி செல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
தொழிநுட்ப குரு
ஜெர்மனியின் தொழிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் நகரங்களான முனிச் , பெர்லின், ஹாம்பர்க் போன்றவையில் இவர்கள் வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஜெர்மனி பாஷை தெரியாது. ஆனால் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அத்த்னை தொழிநுட்ப நன்மைகளையும் இவர்கள் அனுபவித்து கொள்வார்கள்.
இவர்களின் ஜெர்மனி வருகை என்பதும் இதற்காக மட்டுமே. ஒரு நிறுவனத்தின் தலைவர் அல்லது விளம்பர பிரிவு தொடர்பாளர் இப்படி யாராக இருந்தாலும் சிலிகான் பள்ளத்தாக்கு வழியாக ஜெர்மனிக்கு வந்தபின் இவர்கள் திரும்பி போக விரும்புவதில்லை. காரணம் உயர்தர வாழ்க்கை மற்றும் வேலை மற்றும் வாழ்விற்கான சமவிகித கலாச்சாரம் இவர்களை ஈர்க்கிறது. ஆகவே இவர்கள் ஜெர்மனியை விட்டு செல்ல விரும்புவதில்லை.
பவேரியர்கள்
தங்களது விருப்ப பட்டியல் அனைத்தையும் ஒரே இடத்தில நிறைவேற்றி தரும் பவேரியாவை விரும்பாத அமெரிக்கர்கள் யாருமே இல்லை.
இயற்கை ஆர்வலர்கள்
ஜெர்மனி திடீரென சைவத்திற்கு மாறிவிட்டது என்று சந்தோஷப்பட்டு கொள்வார்கள், பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து வரும் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். இருப்பினும் அவ்வப்போது மாட்டிறைச்சி மற்றும் கார்ட்டின் கிடைக்கவில்லை என்று வருந்தவும் செய்வார்கள்
ஒரு பெரிய கனமான ஜாக்கெட்டை மாட்டியபடி தெருக்களில் நகரும் இவர்களுக்கு முதலில் கலிபோர்னியா பிடிக்கும் ஆனால் இரண்டாவது இடத்தில் எப்போதும் ஜெர்மனிதான்.
ராணுவத்தில் அமெரிக்கர்கள்
இவர்களின் பெரும்பாலான நேரங்கள் ராணுவ பயிற்சி முகாம்களில் முடிந்து விடுகின்றன. தங்கள் குழந்தைகளோடு நேரம் செலவழிக்கவோ அல்லது ஜெர்மனியை சுற்றி பார்ப்பதற்கோ இவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.
இந்த அமெரிக்க ராணுவ வீரர்களில் சிலர் ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்திருக்கலாம். ஒரு சிலர் வேறு வேறு இடங்களில் பிறந்து இங்கு வந்தடைந்திருக்கலாம். இருப்பினும் இவர்களுக்கும் ஜேர்மன் நாட்டிற்குமான பந்தம் என்பது எப்போதும் நிரந்தரமானது.
நாட்டின் தெற்கில் ஸ்டூட்கார்ட் மற்றும் ராம்ஸ்டைன் போன்ற பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றனர்
பிறந்த இடத்தை மறந்தவர்கள்
இந்த வகையான அமெரிக்கர்கள் எப்போதும் தங்களை ஜெர்மனியர்களாகவே காட்டி கொள்கின்றனர். இவர்களது ஜேர்மன் மொழியும் சிறப்பான முறையில் வெளிப்படுகிறது. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்காத அளவிற்கு ஜெர்மனியர்களாகவே மாறியிருப்பது இவர்களுடைய பெருமிதங்களில் ஒன்று.அப்படி மீறி கேட்டாலும் பெரும்பாலும் இவர்கள் உண்மையை சொல்வதில்லை. பாரம்பர்ய ஜெர்மானியர்களை போலவே இவர்கள் முசூலியை தயிருடன் உண்கின்றனர். நாளின் இறுதிகளில் அபேன்ப்ராட் எனப்படும் இரவு உணவை எடுப்பது அது மட்டும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் டாட்டோர்ட் என்ன நேரத்தில் வருகிறது என்பதை பற்றியெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள்.
தாங்கள் வசித்து வரும் மொழி Deutsch என்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலப்பதிவுகளையே அதிகம் பதிவிடுவார்கள். இவர்கள் எங்கிருந்தாலும் இவர்களின் இதயம் என்னவோ ஜெர்மனியில்தான் இருக்கும்.
எப்போதும் அமெரிக்கர்கள்
இங்கு வந்ததும் thanks giving நாளை தங்களது ஆங்கில நண்பர்களுடன் கொண்டாடி மகிழும் இவர்கள் எப்போதும் 100 சதவிகித அமெரிக்க பேபிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஒரு வேளை வேலைக்காக அவர்கள் ஜெர்மனிக்கு வந்திருக்கலாம் அல்லது காதலை கண்டடைவதற்காக அவர்கள் வந்திருக்கலாம். ஆனால் எப்போதும் இவர்கள் மனம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வருகிறது.
நாடோடிகள்
ஏழு மொழிகள் பற்றிய அறிவு இவர்களிடம் இருக்கும். சிறிய அளவில் இவர்கள் அதனை பேசவும் செய்வார்கள். எனினும் உண்மையில் ஜேர்மன் இவர்கள் விருப்ப மொழியாக இருக்காது.
எந்த நாட்டையும் சொந்தம் கொண்டாடாத இவர்கள் தங்களை "உலக குடிமகன்கள்" என்று கூறிக்கொண்டு உற்சாகமாக ஊர் சுற்றுவது இவர்கள் விருப்பம்.
அரசியல் வெறுப்பாளர்கள்
ஜெர்மனியின் சோஷலிசமும் தாராளமயமாக்கலும் இவர்களால் பாராட்டப்படுகிறது.
அமெரிக்காவின் கொடூரமான அரசியல் முறைகள் , மோசமான அரசியல்வாதிகள் இவர்களை ஜெர்மனுக்கு அனுப்பி வைத்து விடுகின்றன. ஜெர்மனின் உள்ளார்ந்த அரசியல் இவர்களுக்கு தெரியாத போதிலும் பாதுகாப்பு காரணங்க்களுக்காக இவர்கள் ஜெர்மனிக்கு வருகை தருகின்றனர்.
நான் அமெரிக்கன் இல்லை கனடியன்
என்னதான் கவனமாக பார்த்தாலும் சில நேரங்களில் அமெரிக்கர்களுக்கும் கனடியர்களுக்குமான வித்யாசங்கள் தெரிவதில்லை. அவர்களாக சொல்லாத வரையில் சில கனடியர்களை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. சில சமயங்களில் மாபிள் சிரப் குடிப்பதன் மூலம் அவர்கள் வாடா அமெரிக்கர்கள் என்பதை வேண்டுமானால் கண்டறிய முடியும்.இதில் நீங்கள் தவறாக குறிப்பிட்டாலும் கனடியர்கள் அதனை அப்படியே விட்டு விட மாட்டார்கள். கண்டிப்பாக உங்கள் தவறை சொல்லி சொல்லி அதன் பெயரிலேயே உங்களை அழைக்கவும் ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே கவனமாக இருங்கள்.
ஜெர்மனியில் வசிக்கும் 13 விதமான அமெரிக்கர்கள் -
Reviewed by Author
on
May 26, 2018
Rating:

No comments:
Post a Comment