மேகன் மெர்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்ததற்கான முத்திரை வெளியானது -
குறித்த முத்திரையானது பிரித்தானிய அரச குடும்பத்தில் ஒவ்வொருவரது தகுதி மற்றும் அடையாளத்தை குறிப்பிடுவதாகும்.
Coat of Arms எனப்படும் குறித்த முத்திரையானது இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தங்களது 18-வது பிறந்த நாளின்போது அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேகன் மெர்க்கல் கடந்த வாரம் பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டமையால் சசெக்ஸின் டச்சஸ் என அறியப்படுகிறார்.
இந்த நிலையில் இளவரசி மேகன் மெர்க்கலுக்கான அதிகாரப்பூர்வ முத்திரையை வெளியிட்டுள்ளனர்.
அதில் மெர்க்கலின் தனித்தன்மை மற்றும் அமெரிக்க தொடர்பு குறித்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மெர்க்கலின் முத்திரையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இளவரசி கேட் மிடில்டனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட முத்திரையைவிடவும் அதிகப்படியான அம்சங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த முத்திரையை அதிகாரப்பூர்வமாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி மெர்க்கல் இனி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் லெட்டர்ஹெட் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த முத்திரையில் குறிப்பிடப்பட்டுள்ள நீல வண்ணம் பசிபிக் பெருங்கடலை குறிப்பதாகவும், இரண்டு தங்க கதிர்கள் மேகன் மெர்க்கலின் பிறந்த மாகாணத்தை குறிப்பதாகவும், மூன்று இறகுகள் தகவல் தொடர்பு மற்றும் வார்த்தைகளின் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிகாரப்பூர்வ முத்திரைக்கு இரண்டாம் எலிசபெத் ராணியார் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேகன் மெர்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்ததற்கான முத்திரை வெளியானது -
Reviewed by Author
on
May 26, 2018
Rating:
No comments:
Post a Comment