அண்மைய செய்திகள்

recent
-

தமிழக சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை -


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் வேதாரண்யம் மேல்பட்டினம் அருகே கடந்த மாதம் நடுக்கடலில் எல்லையை தாண்டி படகில் வந்து மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக கடலோர காவல்படை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு புழல் சிறையில் உள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி நேற்று இரவு புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் தனி வேன் மூலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை - Reviewed by Author on May 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.