சென்னை அணிCSK இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சு தெரிவு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சாஹல் வீசிய பந்தில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார்.
இந்த ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆட்டத்தின் 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார்.
அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை சர்துல் தாகூர் வீசினார்.
கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4.2 ஓவரில் 36 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன்(12), மணிஷ் பாண்டே(8), யூசுப் பதான்(24) ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.
இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ஓட்டங்கள் கிடைத்தது.
கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 140 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். சர்துல் தாகூரின் கடைசி 2 ஓவரில் 37 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வாட்சன் ’டக்’ அவுட்டாகி ஏமாற்றினார். பின் வந்த ரெய்னாவை (22) போல்டாக்கிய கவுல், அடுத்த பந்திலேயே அம்பதி ராயுடுவையும் (0) போல்டாக்கி மிரட்டினார்.
இதையடுத்து சென்னை அணி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின் வந்த டோனி (9) ரசித் சுழலில் சிக்க சென்னை அணிக்கு மேலும் சிக்கல் துவங்கியது.
தொடர்ந்து வந்த பிராவோ (7), ரவிந்திர ஜடேஜா (3), சகார் (10) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, சென்னை அணி ஒட்டு மொத்தமாக ஆட்டம் கண்டது.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறு முனையில் டுபிளசி தனி ஆளாக போராடினார். சீரான இடைவேளையில் டுபிளசி பவுண்டரி விளாச, சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
தோல்வியடைந்த ஹைதராபாத் அணிக்கு எலிமினேட்டரில் வெல்லும் அணியுடன் மோதி இறுதி போட்டிக்கு முன்னேற இரண்டாவது வாய்ப்பு உள்ளது.
சென்னை அணிCSK இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
Reviewed by Author
on
May 23, 2018
Rating:
No comments:
Post a Comment