மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்கரரான ஜாக்கிசானின் மகள் தெருவில் வசிக்கும் பரிதாபம் -
இவர் கடந்த ஆண்டு நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் எனது தோழி ஆண்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இன்றி பாலத்தில் வசித்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு.
எங்களுக்கு உதவி செய்யுமாறு எனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனது தந்தை 395 மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரர். அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், எங்களை பிரித்துவிடுவார்களே என பயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை புரிந்துகொண்டு உதவி செய்ய முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.
ஹாங்காங்கின் முன்னாள் அழகி எலா நங்க்கும்- ஜாக்கி சானுக்கும் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் தான் எட்டா நங். ஜாக்கி சானுக்கு 1982 ஆம் ஆண்டு ஜோன் லிம் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
தனது மகளின் நிலை குறித்து ஜாக்கிசான் பெரிதாக கருத்து கூற முன்வரவில்லை. ஒரு தந்தையாக எனது மகள் விடயத்தில் நான் தோல்வியடைந்துவிட்டேன், இதனை எப்படி அணுகுவது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்கரரான ஜாக்கிசானின் மகள் தெருவில் வசிக்கும் பரிதாபம் -
Reviewed by Author
on
May 01, 2018
Rating:

No comments:
Post a Comment