அண்மைய செய்திகள்

recent
-

இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை -


ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் தீர்வொன்றினை வழங்குவதற்கு இந்த ஆண்டுக்குள் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின பிரகடனமாக இதுவெளியிட்டு வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வில் தமிழரசுக்கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கத்தினால் இந்த பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அந்த பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழினப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படாத காரணத்தால் இடம்பெற்று வரும் ஜனநாயக வழிப் போராட்டங்களினாலும், ஆயுதப் போரின் விளைவுகளாலும், 2012 முதல் 2015 வரையான ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களினாலும், சர்வதேச சமூகத்தின் தலையீடுகளினாலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இருந்த பொழுதிலும் தமிழினப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை மிக விரைவில் இவ்வாண்டுக்குள் ஏற்படுத்த வேண்டுமென அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும், அனைத்து சமூகங்களிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் இம் மே நாள் மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.

அவ் அரசியல் தீர்வானது ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமடிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என இம் “மே” தின மாநாடு வற்புறுத்துகின்றது.

2. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2012 முதல் 2015 வரை இலங்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1, 34/1 ஆகியன முழுமையாக கால அட்டவணையில் நிறைவேற்றப்படவும், நடைமுறைப்படுத்தப்படவும், மக்கள் பயனுறும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்படவும், நம்பகத்தன்மை நிலைநாட்டப்படவும் வேண்டும்.

3. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பு
 போரின் காலத்தில் முப்படைகளினாலும், காவல் துறையினாலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார், அரச நிலங்கள் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென “மே” மாநாடு வலியுறுத்துகின்றது.
அத்தோடு மகாவலித் திட்டத்தின் கீழும், வனவிலங்கு பரிபாலனத்துறை, சுற்றுச் சூழல்துறை, தொல்லியல், கரையோரப் பாதுகாப்பு முதலான அரச மற்றும் அரச துறைகளினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். நிலமற்ற, வீடு அற்ற, தொழிலற்ற மக்களுக்கு நிலங்கள் வீடுகள், தொழில் வாய்ப்புக்கள் வழங்கும் வகையில் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது. அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட பண்ணைகளும் உரித்துடையவர்களிடம் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும்.

4. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாகப் போர் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், உறவினரால் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் வழங்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசுக்கும் உண்டு. ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் சிபார்சுகளும், நடவடிக்கைகளும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

5. மீள்குடியேற்றம்
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தத்தம் நிலங்களில் உடன் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். மக்கள்வாழ்வுரிமை அங்கீகரிக்கப்பட்டு நிலமற்றவர்களுக்கு நிலம், தொழில் அற்றவர்களுக்குத் தொழில், வீடு அற்றவர்களுக்கு வீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களை அவர்களுக்குரிய இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என இம் “மே” மாநாடு வற்புறுத்துகின்றது. புலம்பெயர்ந்த மக்கள் இரட்டைக்குடியுரிமை பெறுவதற்கும் முதலீடுகள் செய்வதற்கும் உள்ள பொருத்தமான இலகுமுறைகள் கொண்ட சட்ட நடவடிக்கை உருவாக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.

6. கைதிகள் விடுதலை
போர் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டு மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டுமெனவும், அதற்கு வசதியாகவும், நடைமுறைச் சாத்தியமாகவும் உலக தரம் மிக்க சட்டமொன்றை உருவாக்குவதற்கு ஏதுவாக தற்போதுள்ள கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டமானது உடன் நீக்கபட வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.

7. தொழில் வேலை வாய்ப்பு
குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கல்வி கற்ற, பட்டபடிப்புக் கொண்டவர்களுக்கு மூப்பு அடிப்படையில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அரசுத் துறையில் வேலைவாய்;ப்பைப் பெறத் தகுதியானவர்கள் வயது கூடியவர்களாக இருப்பின் 45 வயதுடையவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவைத் தீர்மானமொன்றை உடன் நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

8. (அ) போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தின் இணைப்பு
போர் காரணமாகக் கல்வி பெற வாய்ப்பு அற்றவர்கள் குறிப்பாக போராளிளாக இருந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி வழங்கி அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கும் அடிப்படைச் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கேற்ப வழங்க வேண்டும். அது வரை அவ்வாறனவர்கள் வாழுவதற்கு நிதி உதவி வழங்கும் முறையொன்றைக் கொண்டு வர வேண்டும். ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கப்படப் பொருத்தமான நடவடிக்கைகள்; உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இம் மே தின மாநாடு வற்புறுத்துகிறது.
(ஆ) மேலும் இதற்குப் பொருத்தமாக அரசுத் துறையில் உள்ள வெற்றிடங்கள் அவ்வப் பிரதேசங்;களிலிருந்தே நிரப்பப்படுதல் வேண்டும். அவ் விடயங்களில் தவறாக நிரப்பப்பட்டிருந்தால் அவர்களை திருப்பிப்; பெற்று, அவர்களுக்கு உரிய பிரதேசங்களில் இடம்மாற்றம் வழங்கப்பட வேண்டும்.

9. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்:
போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவாழ்வு, வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் தொழில் துறைகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென இம் மே தின மாநாடு வற்புறுத்துகிறது.

10. பெண்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறைகளிலிருந்தும், சிறுவர் துஸ்பிரயோகங்ளிலிருந்தும் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறைகளிலும், சிறுவர் துஸ்பிரயோகளிலும் ஈடுபடுபவர்களுக்கெதிராக தண்டனை வழங்கப்படுதல் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.

11. தொழில் துறைகள்
போர் காரணமாக அழிக்கப்பட்ட,கைவிடப்பட்ட பெருந் தொழிற்சாலைகள் பொருத்தமான வகையில் நவீனமயமாக்கப்பட்டு மீளக் கட்டியெழுப்பப்படுதல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமாக புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை; பயன்படுத்தி புதிய சிறு தொழில்கள், மத்திய தர தொழில்கள் பெருந்தொழில்துறைகள் என்பன குறுகியகால, நீண்ட கால அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.

12. தெங்கு பனம் பொருள் அபிவிருத்தி
(அ) பனம் பொருள்துறை கள், பதநீர், கருப்பட்டி மற்றும் பனைவள உற்பத்திகள் மற்றும் திக்கம் வடிசாலை அபிவிருத்தி, கள்ளு போதையற்ற நிலையில் போத்தலில் அடைத்தல் அதனைசந்தைப்படுத்தல் நவீன முறையில் ஏற்படுத்த வேண்டும். அதனால் பெறப்படும் இலாபங்கள் கூட்டுறவாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.

13. மீன்பிடித்துறை
மீன்பிடித்துறையில் நவீன தொழில்நுட்பமும் பயிற்சியும், சந்தைப்படுத்தலும் அவசியமாக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு கல்லடியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஐஸ்கட்டி தொழிறசாலை புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட வேண்டும். மீன் பதனிடுதல் மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையிலும் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற வகையில் ஏற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இலாபங்கள் தொழில் செய்பவர்களுக்கே செல்லும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

14. கல்வி
ஆரம்பக் கல்வி கற்பது கட்டாயமானதாகும். பல்கலைகழக மற்றும் தொழில் துறை கற்கை நிறுவனங்கள், தொழில்நுட்பக் கற்கைகள் வடக்குக் கிழக்கில் பிராந்திய உயர் கற்கை நிறுவனங்களாகவும்,அனைத்துப் பீடங்களையும் கொண்டதாகவும் மாணவர் அனுமதியில் 75% க்கு மேல் அந்தந்தப் பிராந்தியங்களிலிருந்தே திட்டமிட்ட அடிப்படையில் தேர்ந்தெடுப்பதும் தொழிலை உறுதிப்படுத்துவதும் அறிவியல், மருத்துவம்,பொறியியல் மற்றும் வர்த்தக துறைகளுக்கு 65மூ மானவர்களை உருவாக்குதலும் வேண்டும் என இம் மே தின மாநாடு வற்புறுத்துகிறது.

15. நில, நீர் உரிமை நிலைநாட்டல்
மகாவலி நீர் வேளாண் அபிவிருத்தியில் குடிசார் மக்கள் இனவீத மாற்றம்(ழெவ வழ உhயபெந னநஅழபசயிhiஉ pயவவநசn) ஏற்படாத வகையில் நீர் பாய்ச்சல், குளங்கள் என்பவற்றிற்கு நீர்ப்பாசனத்திற்கு மட்டுமே அத்திட்டங்கள் பயனுற வேண்டும். அபிவிருத்தியில், குடியேற்றத்தில் அப் பிராந்திய மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பவை உறுதி செய்யப்பட வேண்டும். இத் திட்டங்கள் எவ்வகையிலும் இன விகிதாசாரம் மாற்றப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

16. வங்கிக் கடன் இரத்து
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள், கடன்கள் வழங்கியிருந்தன. அக் கடன்கள் அம் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொடுக்கவில்லை. கடன் பெற்றவர்கள் போரில் உடமைகளை தொழிலை இழந்தவர்கள் கடன்களைத் தீர்க்க முடியாமல், இருந்ததையும் இழக்கும் நிலையில் உள்ளனர். இவர்கள் பெற்ற கடன்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றது இம் மே தின மாநாடு

17. தொழிற்சங்க உரிமை
பல துறைகளிலும் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக உழைத்து வரும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அச்சங்கங்களுடன் அரசு பிரச்சனைகள் எழும்போது அவர்களுடன் ஜனநாயக ரீதியில் பேச்சுக்கள் மூலம் இணக்கம் ஏற்பட முயற்சிப்பது தான் முறையென வற்புறுத்துகிறோம்.
18. தேர்தல்களில் மலையக மக்கள், முஸ்லீம் மக்கள், பெண்கள் குறிப்பாக ஏனைய சமூக மக்கள் பெரும்பான்மையாயிருக்கும் நிலையில் வட்டாரங்களில், தொகுதிகளில் தனியான ஒதுக்கீடுகள் வீதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட வேண்டும்.

19. வடக்கு கிழக்கு மீனவர்களின் தொழிலுரிமை பாதுகாக்கப்படுத்தப்படல் வேண்டும். மீன் பிடிப்பதிலும் கலங்களைப் பயன்படுத்துவதிலும் நவீன பயிற்சிகளும், சிறந்த பாவனைக்குரிய கலங்கள் தனித்தும், கூட்டாகவும் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசு நவீன முறைகளைக் கையாள உதவ வேண்டும்.
சந்தைப்படுத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் முழு அளவில் வருமானத்தை ஈட்டுவதற்கும் பொருத்தமான வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். வடக்குக் கிழக்கு மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து கடலில் தொழில் செய்வதற்கு தடையாகவும், மீன்வளத்தை அழிக்கும் வகையிலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி சாதனங்கள் வள்ளங்கள் பயன்படுத்துதல், தென்னிலங்கை மீனவர்களும் அயல் நாடுகளிலிருந்து பெரும் கலங்களையும், இயந்திரங்களையும் வடக்குக் கிழக்குப்பிராந்தியக் கடலில் வந்து தரித்து நின்று ஆக்கிரமித்து மீன் வளத்தை அள்ளிச் செல்வதிலிருந்தும் உள்@ர் மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

20. வடக்குக் கிழக்கில் கூட்டுறவுத்துறை ஒரு காலத்தில் இலாபத்துடன் மக்களுக்குப் பெரும் சேவை ஆற்றி வந்தது. போர் காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே அச்சுறுத்தல் மத்தியிலும் பெரும் உதவியாக விளங்கியது.
அக்காலத்திலும், அதன் பின்னரும் கூட்டுறவுச் சங்கங்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் கடன்படும் நிலைக்கும் தள்ளப்பட்ட கூட்டுறவு ஊழியர்கள் சம்பளம் பெறாமலே பலகாலம் தம்மை அர்ப்பணித்து மக்களுக்கு உதவி வந்தனர். இவ்வகையில் கூட்டுறவுத்துறையடைந்துள்ள நட்டங்களுக்கும், கடன்களுக்கும் அரசு பொருத்தமான உதவி வழங்க வேண்டும். மீண்டும் கூட்டுறவுத்துறைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டுமென அரசையும், மாகாணசபையையும் வற்புறுத்துகின்றது இம் மாநாடு.

21. அண்மையில் 2018ல் நடைபெற்ற உள்@ர் அதிகாரசபைத் தேர்தல்களினால் உருவாக்கப்பட்ட சபைகளுக்கு நிதி உட்பட கூடுதலான அதிகாரங்கள் அரசினால் வழங்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு போதிய நிதி நன்கொடைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
22. பனை, தென்னை அபிவிருத்திச் சபை மாகாண அதிகாரத்தில் கொண்டு வரப்படவேண்டும். பனை தென்னை அபிவிருத்திச் சபைக் கூட்டுறவுக் கட்டமைப்பினால் நிர்வகிக்க முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
(திக்கம் வடிசாலை நவீன வசதிகளுடன் மீளக் கட்டியெழுப்ப அரசின் ஒப்புதல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்னரும் சம்பந்தப்பட்ட அமைச்சு கைத்தொழிற்சாலையை நிறுவ முறையான நடவடிக்கை எடுக்காமையை கண்டிக்க வேண்டும். அரசு தலையிட்டு திக்கம் வடிசாலையை கட்டியமைக்க கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.)

23. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கை செலவுக்கு ஏற்;ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
24. நெல், வெங்காயம் முதலான வேளாண் விளைச்சல்,மீன் வளம், பனை வளம் முதலான உற்பத்தி பண்டங்களுக்கு நியாய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். வேளாண்மை அறுவடைக் காலங்களில் அவ்வுற்பத்திகள் தொடர்பான இறக்குமதி நிறுத்தப்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரம் வர்த்தகம் உயர்த்துவதற்கு பொருளாதார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். உலக தர உற்பத்திகளைப் பெருக்க வேண்டும்.
(அ). உலக சந்தைப் பொருளாதாரத்துடன் போட்;டியிடக் கூடிய புதிய உற்பத்திகள், மாற்றுப் பயிர் விளைச்சல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அறிமுகப்படுத்திய அதே வேளை பெரு வர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்டு உள்@ர் வர்த்தகம் பாதுகாக்;கப்படவும் வேண்டும்.

25. உலக தர ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுள்வேதம். அதற்குரிய மருத்துவர்கள்,தாதிகள் சிற்றூழியர் தேவைக்கேற்றவாறு நியமிக்கப்பட வேண்டும்.
(அ) மக்களின் உடல் நலம் உலக சுகாதார மேம்பாட்டை கொண்டதாகவும் அனைவருக்கும் மருத்துவம் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மக்களுக்கு உலக தர மருத்துவம் உறுதிப்படுத்தப்படவும் பொருத்தமான மருத்துவர்கள், தாதிகள் (ரேசளநள) நியமனம் செய்யப்படவும் வேண்டும்.
26. ஊடகவியலாளர்
ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது ஜனநாயகக் கடமையாகும் இருந்தும் பல ஊடகவியலாளர் தமிழ் சிங்கள ஆசிரியர்களுட்பட மர்மமான முறையிலும் நேரடியாகவும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஊடகத்துறை மிகுந்த அச்சுறுத்தலுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகி வருகிறது. இத்தகைய கொலைகள் அச்சுறுத்தல்கள் பற்றி முழுமையான நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இக் கொலைகள் அச்சுறுத்தல்களின் பின்னணிகள், உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். இதற்காக ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவும் வேண்டும் என இம் “ மே” மாநாடு வற்புறுத்துகிறது.

27. வடக்குக் கிழக்கிற்கு இணைந்த கட்டுமானமும் மேற்பார்வையும் போரினால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் துறைகளிலும் முழுமையான ஒண்றிணைந்த திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நிறைவேற்றவும் நிபுணத்துவமும், வினைத்திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட பொறிமுறை நிறுவப்பட வேண்டும்.
போரினால் சீரழிந்த நாடுகளை மீளக் கட்டியெழுப்புவதில் அனுபவம் நிபுணத்துவம் மிக்கவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் கால அட்டவணையின் அடிப்படையில் அத்திட்டங்கள் நிறைவேற்றப்படுதலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தப் பிரகடனத்தில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள விடயங்களின் பால் அதிக அக்கறையை அரசு செலுத்த வேண்டும் என்றும், கூட்டு எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியலாளர்கள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள், அரச துறை சாரா நிறுவனங்கள், அறிவுழைப்பினர் (புத்திஜீவிகள்) உள்ளிட்ட நாட்டு நலனின்பால் அக்கறையுள்ள அனைவரும் தங்களாலான சாதக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கறையோடும், அன்போடும் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை - Reviewed by Author on May 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.