யாழ்ப்பாணத்தில் நடந்த சோக சம்பவம் - இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக மரணம் -
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்
கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளர்.
மாணவன் காங்கேசன்துறைக்கு சென்று வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
மிகவும் சோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ந்தனர். எனினும் சிசிக்சையின் பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த சோக சம்பவம் - இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக மரணம் -
Reviewed by Author
on
May 09, 2018
Rating:

No comments:
Post a Comment