பிரித்தானியாவில் பற்றி எரியும் இலங்கைத் தமிழர்களின் வீடுகள்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொலிஸார் -
வடக்கு லண்டன் வெம்பிளி நீஸ்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
கடவுளுக்கு பற்ற வைத்த விளக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டமையினால், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.
தொடர் வீட்டுத் தொகுதி என்பதால் அருகிலிருந்த இரு வீடுகளுக்கும் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் வசித்த இந்து குடும்பத்தின் பெண் வழமையை போன்று மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் இருந்த விளக்கினை பற்ற வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு பற்ற வைத்தவர் அணைக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
கடவுளுக்கு பற்ற வைத்த விளக்கு என்பதனால் அங்கிருந்து செல்வதற்கு முன்னர் அவர் அதனை அணைப்பதற்கு முயற்சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குளிரான காலநிலைக்கு ஏற்ற வகையில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா நாடுகளின் வீடுகள் நூற்றுக்கு 80 வீதம் பலகையினாலேயே நிர்மாணிக்கப்படுகின்றது. இவை தீப்பற்றும் போது இலகுவாக பாதிக்க கூடிய ஒன்றாகும்.
இதேவேளை, பிரித்தானியாவுக்கு குடியேறியுள்ள இலங்கையர்களின் வீடுகள் தொடர்ந்து இவ்வாறு தீப்பற்றுவதாகவும், அவ்வாறான தீ விபத்துக்களுக்கு பிரதான காரணம் கடவுள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு ஏற்றப்படும் விளக்கு மற்றும் பத்திகளாகும் என லண்டன் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இறுதியில் லண்டன் இராணுவத்தினரே இவ்வாறான தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவும், அதற்கு வீடு முழுவதும் சேதமடைந்துவிடுவதாகவும், இவ்வாறான விடயங்களின் போது அவதானமாக இருக்குமாறும் குடியேறுபவர்களுக்கு தீயணைப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எப்படியிருப்பினும் அருகில் உள்ள இரண்டு வீடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீப்பரவியுள்ளது. இதனை கடவுள் தடுக்க மாட்டார் என்பதனை நினைவில் வைத்து கொண்டு செயற்படுமாறும் இது இவ்வாறான தவறுகளை செய்பவர்களுக்கு சிறப்பான பாடமாக இருக்கும் எனவும் அங்குள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் பற்றி எரியும் இலங்கைத் தமிழர்களின் வீடுகள்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொலிஸார் -
Reviewed by Author
on
May 09, 2018
Rating:

No comments:
Post a Comment