தூத்துக்குடியில் அறுபடும் தொப்புள்கொடிகள்......
வலி கூடி
விழி மூடி கிடக்கும் தமிழா
வெடி ஒலி கேட்டு
பொடிப்பொடியாய் வொடியாய்......
ஈழத்தில் ஓய்வுபெறும் வெடிச்சத்தம்
இந்தியாவில் தூத்துக்குடியில்-எம்மினத்தில்
பாய்ந்து இரத்தம் குடித்து
பசி தீர்க்கின்றது.....
தொப்புள் கொடி உறவுகள்
துப்பாக்கி வேட்டுகளில்
தப்பாக வீதிகளில்-பண முதலைகளின்
மப்பினால்......ஐயோ..... ஐயோ.....
ஜல்லிக்கட்டு....
நீட்தேர்வு...காவேரி
நீர்கேட்டு தினமும்-வெட்கப்பட்டு இப்போ
ஸ்டெர்லைட் ஆலை-இவையெல்லாம்
தமிழர்களுக்கு வைக்கும் உயிர் உலை
தமிழ் தலைமைகள்-பலகோடிகளில்
தரங்கெட்டு விலைபோனதால்
தமிழர்களுக்கு இந்த நிலை
தமிழர் உயிர்கள் கொலை
கௌரவ பிரதமர் மோடி அவர்களே
கௌரவ தமிழ் கேடிகளே
கௌரவமாய் ஆசனத்துக்கு புகழ்பாடிகளே
கௌரவர்கள் போல .....
இறப்புக்கும் இழப்புக்கும்
இலட்சங்கள் கொடுத்து இரங்கல் பாடி
இலச்சிய வழியில் இருந்து -எம்மை
இறக்கி விட்டு....
இருட்டறையில் இன்புற்றிருக்கும்-ஈனர்களே
தன்னினத்தினையே அள்ளி தின்னும் பிணம்
தின்னிகளை வெஞ்சினம் கொண்டு கொள்ளிவைக்க வேண்டாமா
தமிழினமே.....தயக்கமேன்......மயக்கமேன்.....
ஈழத்தில் இருந்து
இதயம் கலங்கி நீதி வேண்டி நிற்கின்றேன்
ஈழக்கவிஞன்
வை-கஜேந்திரன்-

தூத்துக்குடியில் அறுபடும் தொப்புள்கொடிகள்......
Reviewed by Author
on
May 25, 2018
Rating:

No comments:
Post a Comment