மேன்மை கொண்ட தொழிலாளர் தினமே.......மே ஒன்று
உன்னத தோழா-இன்று
உனக்கான நாள்தான்
உண்மையில் உலகமே
உவகை கொள்ளும் நாள்-இன்று
செங்குருதி
செந்நீர் வியர்வையாக
செல்லும் இடமெல்லாம் செங்கோல்
சிறப்புற வாழ.....ஆள
உனது பிறப்பிலும் இறப்பிலும்
உண்ணும் உணவும்
உடுக்கும் உடையும் உனது காட்சிகளுக்கும்
உலகத்தின் சரித்திரத்திலும் சாட்சிகளாய்
உள்ளே உள்ளது பலரின் உழைப்பு......
உற்பத்திகள் உரிமைப்பொருட்கள்
உயிர் உள்ள மனதர்க்கும் உயிர்தருவதே உழைப்பு
உன்னை உருக்கி உழைப்பை பெருக்கி
உலகை காக்கும் உன்னத தொழிலே உழவு
பஞ்ஞனையும் சஞ்சாரமும்
பயணமும் சயனமும்-பார் முழுதும்
பம்பரமாய் ஜொலிக்க
பாடுகளே பலரின் உழைப்பு
சாக்கடையிலும் பூக்கடையிலும்
சலூனும் சந்திர மண்டலமும்
சட்டமும் சமையலும்
சன்னியாசமும் சமமான தொழில்தானே
உற்சாகமான உடல் உழைப்பு
உண்மையாய் உலகை வெல்லும்
உரிமையுடன் உன்பேர் சொல்லும்....
வாழ்வு எழில் பெற
வாழ்க்கையில் தொழில் திற
தொல்லைகள் இன்றி பற
தோள் கொடுத்து தொழிலாளியாகி சிற
சுயபுத்திக்கு சுகந்திரம் கொடுங்கள்
விரும்பிச்செய்யாத தொழில்களில்
முழுமையும் இல்லை
பெருமையும் இல்லை
மேதினிலே வாழ
மெய்வருத்தி-அபிவிருத்தி
மேன்மை கொண்ட தொழிலாளர் தினமே
மே தினமே........மே ஒன்று
மனம்விட்டு வாழ்த்துவோமே இன்றும்..... என்றும்.....
-கவிஞர் -வை.கஜேந்திரன்-
மேன்மை கொண்ட தொழிலாளர் தினமே.......மே ஒன்று
Reviewed by Author
on
May 01, 2018
Rating:

No comments:
Post a Comment