உலக தொழிலாளர் தின சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தி.....
உலக தொழிலாளர் தினமான மே 1 உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூரும் நாளாகவும்
கௌரவப்படுத்தும் தினமாகவும் கொண்டாடப்படுகின்றது.தொழிலாளர்கள்
உழைப்பில்த்தான் இவ் உலகமே இயங்குகின்றது.தற்போது உலகம் முன்னெப்போதும்
இல்லாத வகையில் நிதி மூலதனத்தாலும் ஏகாதிபத்தியவாதிகாளாலும்
சுரண்டல்களுக்கு ஆட்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வருடத்திற்கு ஒருதடவை மட்டும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்
அல்ல வருடம் முழுவதும் நினைத்து பாராட்டப்படவேண்டியவர்கள்.
அடக்குமுறை எங்குபிரயோகிக்கப்படுகின்றதோ அங்கு கிளர்ச்சிஉண்டாகும் பின்பு
அது போராட்டமாக மாறும் அது நிதர்சனமான உண்மை.
தொடர்ந்தும் எமது மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுள்ளதுடன் கடல்
வளங்களும் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.இந்த நல்லாட்சி அரசாங்கம்.
இதுவரை எமது மக்களுக்கு இவற்றுக்கான எந்தவிதமான தீர்வுகளும் வழங்காமல்
காலத்தை இழுத்தடிப்பு செய்துகொண்டு இருக்கின்றது
பல அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து மீண்டெழுந்த இனம் தொடர்ந்தும் பல
வழிகளில் போராடிக்கொண்டு இருக்கின்ற எமது இனம் என்பதில் இவ் தொழிலாளர்.
தினத்தில் நாம் பெருமை கொள்கின்றோம்.
நன்றி
சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி
உலக தொழிலாளர் தின சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தி.....
Reviewed by Author
on
May 01, 2018
Rating:

No comments:
Post a Comment