உலகிலேயே சத்தான உணவு பழைய சோறாம்! வியக்க வைக்கும் பலன்கள்
அமெரிக்காவில் கூட பழைய சோற்றின் நன்மைகள் பற்றி ஆய்வே நடந்திருக்கு, அந்த அளவுக்கு உலகிலேயே சத்துக்கள் நிறைந்த காலை உணவாக பழைய சோற்றை அங்கீகரித்து இருக்கிறார்கள்.
சத்துக்கள்
பழைய சாதத்தில் பொட்டாஷியம், சோடியம், கால்சியம், மக்னேசியம், பி6 மற்றும் பி12 விட்டமின்கள் உள்ளன.குக்கரில் சமைத்த சாதத்தினை விடவும் வடித்த சாதமே பழைய சாதத்திற்கு ஏற்றது, குளிர்ச்சியான இந்த உணவை பிரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது.
மண்பானையில் இதனை ஊற வைப்பது மேலும் நன்மை பயக்கும்
குறைந்தது 12 மணிநேரமாவது சாதம் நீரில் ஊறியிருக்க வேண்டும், அப்போதுதான் சரியாக நொதித்தல் ஏற்பட்டு நன்மை தரும் பாக்டீரியாக்கள் சாதத்தில் சேரும்.
பழைய சாதத்தின் நன்மைகள்
பழைய சாதத்தை இரவில் ஊற்றி வைத்த நீரோடு மறுநாள் காலை அந்த உணவை பருகினால் ஆண்மை அதிகரிக்கும், தேகத்தில் ஒளி அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.இதனோடு மோர் கலந்து சாப்பிடும்போது உடலில் உள்ள பித்தம் போன்ற நோய்கள் விலகும்.
நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது, செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக இதனை எடுத்துக் கொண்டால் வயிற்றுக்கு நல்லது.
இதிலுள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகிறது, நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும், உடல் சோர்வை போக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச் செய்வதுடன், நாள் முழுதும் நம்மை புத்துணர்வோடு வைக்கும்.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
பழைய சாதத்தினை 4 வயது சிறியவர் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.மோர் கலந்து சாப்பிடும்போது சிலருக்கு தூக்கம் வரும், ஆகவே வேலைக்கு செல்பவர்கள் பழைய சாதத்துடன் மோர் கலந்து சாப்பிடாமல் நீரோடு சாப்பிட வேண்டும்.
பழைய சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம் சரியான தேர்வு, ஏனெனில் பித்தம் வாதம் போன்ற நோய்களை தீர்க்கிறது.
சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் இருக்கும்போதும், உடலுக்கு போதுமான குளிர்ச்சி இருக்கும்போதும் பழைய சாதம் சாப்பிட வேண்டாம்.
உலகிலேயே சத்தான உணவு பழைய சோறாம்! வியக்க வைக்கும் பலன்கள்
Reviewed by Author
on
May 05, 2018
Rating:
No comments:
Post a Comment