வடமாகாண ரென்னிஸ் பெண்கள் பிரிவில் சம்பியனாகிய சுண்டுக்குழி மகளிர் கல்லூரி!
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் ரென்னிஸ் திடலில் நேற்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது.
மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலாவது ஒற்றையர் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி அணியின் சார்பில் அஸ்மிகாவும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியின் சார்பில் துலக்சிகாவும் மோதினர்.
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியின் சார்பில் விளையடிய அஸ்மிதா 6:0, 6:0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு செற்ககையும் கைப்பற்றினார்.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியின் சார்பில் அபிசாளினியும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியின் சார்பில் மதுசாவும் மோதினர்.
மது சாளினி 6:1, 6:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு செற்களையும் கைப்பற்றியதை அடுத்து
2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது சுண்டுக்குழி மகளிர் கல்லூரி அணி.
வடமாகாண ரென்னிஸ் பெண்கள் பிரிவில் சம்பியனாகிய சுண்டுக்குழி மகளிர் கல்லூரி!
Reviewed by Author
on
May 25, 2018
Rating:
Reviewed by Author
on
May 25, 2018
Rating:


No comments:
Post a Comment