தமிழக ஆளுநர் சொன்னது என்ன? நடிகர் நாசர் தகவல் -
சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என தமிழக ஆளுநர் உறுதி அளித்திருந்தார்.
இதுதொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஆளுநரை சந்தித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ஆளுநரை சந்தித்து பேசினர்.
இதன்பின் பிரபல நாளிதழுக்கு நடிகர் நாசர் அளித்த தகவலில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது கையெழுத்திட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தோம், இன்னும் இரண்டு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் சொன்னது என்ன? நடிகர் நாசர் தகவல் -
Reviewed by Author
on
May 02, 2018
Rating:

No comments:
Post a Comment