பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் விவேக்கின் கருத்து -
தமிழ் திரையுலகில் கொமெடி நடிகராக உள்ளவர் நடிகர் விவேக். தனது படங்களில் கொமெடி கலந்த பகுத்தறிவு கருத்துக்களை தெரிவித்து வருபவர். இதன் மூலம், ‘ஜனங்களின் கலைஞன்’, ‘சின்ன கலைவாணர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அன்பார்ந்த மாணவர் செல்வங்களே.. குழந்தைகளே.. உங்களின் கோடை விடுமுறையை அனுபவியுங்கள். அதேநேரம் விளையாடி முடித்த பிற்பாடு அதிகமாக தண்ணீரை குடியுங்கள்.
பெண் பிள்ளைகள் உங்களின் அம்மாவுடன் போய் அடுப்படியில் எப்படி சமையல் செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகள் உங்கள் தந்தையுடன் போய் அவர் பணிபுரியும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்’ என தெரிவித்திருந்தார்.
Dear students n kids! Despite summer, enjoy your vacation.Drink lots of water after playing.Girls! b helpful to your moms in kitchen n learn cooking.Boys,go to your dad”s workplace n see how he works for your family!Bond thickens! @sunnewstamil @polimernews @bbctamil @ThanthiTV— Vivekh actor (@Actor_Vivek) May 2, 2018
பெண் பிள்ளைகள் அடுப்படியில் தான் இருக்க வேண்டுமா? இதுதான் உங்கள் பகுத்தறிவுக் கொள்கையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை இந்தப் பெண் அடிமை மனோநிலையில் இருந்து விடுவிக்க முடியாதா? எனவும் தங்களது கேள்விகளை தொடுத்துள்ளனர்.
Seriously? You still want girls to be in kitchen and boys to be in work? Neengallam thirunthave matteengala?— Revathi Duraiswamy (@DJrevathi) May 2, 2018
Definitely expected better from you sir. Hoping you will understand and change the tweet soon. Cheers.— Ashokha Varshini (@ashokhavarshini) May 2, 2018
இந்நிலையில், விவேக் தனது ட்விட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை, அனைத்து பெற்றோரும் ஆமோதிப்பர். என்னைப் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.
அன்பு நண்பரே! தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்துப் பெற்றோரும் ஆமோதிப்பர். என்னை புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி. https://t.co/F6lZNhaRH4— Vivekh actor (@Actor_Vivek) May 2, 2018
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் விவேக்கின் கருத்து -
Reviewed by Author
on
May 02, 2018
Rating:
No comments:
Post a Comment