விடுதலைப் புலிகளின் யுத்ததில் நானும் பங்கெடுத்திருந்தேன்: சீமானை சாடும் வைகோ -
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய ஊடகமான “தி ஹிந்துவுக்கு” வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீமான் போன்ற தமிழ் தேசியவாத தலைவர்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றமை குறித்து அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “ஐந்து நிமிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரகாரனுடன் இருந்தவர்கள் தற்போது,
விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தியவர்கள் போல கருத்து தெரிவிக்கின்றனர்.
எனினும், தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தத்தில் பங்கெடுத்திருந்தேன். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளினால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 18 மாதம் சிறைவாசம் அனுபவித்திருந்தேன்.
விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சிகிச்சையளித்த குற்றச்சாட்டில் எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும்” வை.கோ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் யுத்ததில் நானும் பங்கெடுத்திருந்தேன்: சீமானை சாடும் வைகோ -
Reviewed by Author
on
May 09, 2018
Rating:

No comments:
Post a Comment