துயரத்தில் மூழ்கிய விஷால் குடும்பம்-சகோதரர் தற்கொலை -
நடிகர் விஷால் தற்போது சினிமா, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அரசியல் என தொடர்ந்து பிசியாக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் குடும்பத்திற்கு பேரதிர்ச்சி தந்துள்ளது நெருங்கிய சகோதரர் ஒருவரின் தற்கொலை.
தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான கோபால் ரெட்டியின் மகன் பார்கவ். இவர் விஷாலுக்கு நெருங்கிய உறவினர். இவர் சமீபத்தில் ஆந்திராவில் Vakadu எனும் பகுதிக்கு உள்ள தன் இறால் பண்ணைக்கு சென்றுள்ளார். அவர் கடற்கரைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வராததால் அங்கிருந்த பணியாளர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வரும்போது பார்கவின் உடல் கரையொதுங்கியிருந்தது.
இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் அவர் மரணத்திற்கு ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். "நீ தற்கொலை செய்திருக்க கூடாது. என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன்" என விஷால் கூறியுள்ளார்.
துயரத்தில் மூழ்கிய விஷால் குடும்பம்-சகோதரர் தற்கொலை -
Reviewed by Author
on
May 09, 2018
Rating:

No comments:
Post a Comment