ஹெலிகாப்டர் சோதனை விமானியாக நடிகர் அஜித் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு -
வரும் செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆளில்லா வானுர்தி தொடர்பான போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வானுர்திகளை இயக்க ஆலோசகராக UAV adviser(Unmanned Aerial Vehicles)நடிகர் அஜித்தை அண்ணா பல்கலைக்கழகம் நியமனம் செய்துள்ளது.
மேலும், சோதனை ஹெலிகாப்டர் விமானியாகவும் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு உதவும் வகையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அஜித் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தன்னை அர்பணித்துள்ளார்.
ஹெலிகாப்டர் சோதனை விமானியாக நடிகர் அஜித் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு -
Reviewed by Author
on
May 04, 2018
Rating:

No comments:
Post a Comment