மினி உலகக் கிண்ண கால்பந்து தொடர்: பிபா திட்டம் -
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த ஆண்டு ரஷ்யாவில் ஜூன் 14ஆம் திகதி உலகக் கிண்ண கால்பந்து தொடர் தொடங்க உள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட்டைப் போல, கால்பந்திலும் ‘மினி’ உலகக் கிண்ண தொடர் எனும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த பிபா திட்டமிட்டுள்ளது.
இந்த தொடர் வரும் 2021ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்பு நடக்கும், கான்பெடரேஷன் கிண்ண தொடரை கைவிட பிபா முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மினி உலகக் கிண்ண கால்பந்து தொடர்: பிபா திட்டம் -
Reviewed by Author
on
May 04, 2018
Rating:
No comments:
Post a Comment