மாற்றுத்திறனாளிகளின் வலியோடு விளையாடாதீர்கள்
கடந்த முதலாம் திகதி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள எமது காப்பகத்திற்கு முன் பதினைந்து பேர் காப்பகத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புலம்பெயர் உறவுகளினால் வழங்கப்படும் நிதி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையவில்லை. அதற்கு நாம் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தி உள்ளோம் எனவும், எமது அமைப்பு பதிவு செய்யப்படாத அமைப்பு என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை தெரியப்படுத்தும் நோக்கில் வன்னி மாற்றுத்திறனாளிகள் காப்பகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலைஇவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது வன்னி மாற்றுத்திறனாளிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்களையே எட்டுகிறது. எமது காப்பகமானது வடக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கி வந்தாலும் எம்மால் பாரிய அளவு உதவியினை குறுகிய காலத்திற்குள் வழங்கமுடியாது.
அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் உறவுகளிடமும் தொடர்ந்து பண உதவிகளை கேட்கமுடியாது. அவர்களும் அங்கு தமது குடும்பம் காலநிலைகள் என பல்வேறு சவால்களை கடந்தே பொருளாதார ரீதியாக உதவிவருகின்றனர்.
அவர்களதும், எமது மாற்றுத்திறனாளிகளதும் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு புலம்பெயர் உறவுகளின் நிதிமூலம் ஓர் பாரிய பண்ணை ஒன்றினை அமைப்பதற்கான பூர்வாங்கள் வேலைகளை ஆரம்பித்து இருக்கின்றோம்.
இந்த பண்ணையில் வரும் வருமானங்களை வைத்து முற்றிலும் இயங்கமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளையோ அல்லது மருத்துவ செலவுளையோ வழங்குவதுடன், இயங்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு எமது பண்ணையில் தொழில் வாய்ப்புக்களை வழங்கி பாரிய செயற்த்திட்டமாக முன்னெடுப்பதே எமது நோக்கமும் கூட .
இத்திட்டங்கள் பல மாற்றுத்திறனாளிகளுக்கு சொந்தக்காலில் நிற்ப்பதற்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.
எமக்கு வந்த பணங்களுக்கு கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எமது அமைப்பை இயங்குபவர் தென்னகோன் சரத் என்கின்ற ஒரு மாற்றுத்திறனாளி. இவர் பார்வை இழந்தவர். அத்துடன் இவருக்கு ஓர் கையும் இல்லை.
இவற்றை காரணமாகக் கொண்ட ஒரு சிலர் பணம் மற்றும் காப்பகத்தின் முக்கிய ஆவணங்கள் திருடியமையால் இவற்றை கண்காணிக்கும் முகமாவே கண்காணிப்புக் காமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய சிலர் காப்பகத்தின் முன்னாள் பணியாளர்கள். இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல. குடும்ப வறுமைகாரணமாக எமது காப்பகத்திற்கு பணியாளர்களாக சேர்க்கப்பட்டவர்கள்.
இவர்களே சுய ஒழுக்கமின்மை பணம் மற்றும் காப்பகத்தின் முக்கிய ஆவணங்கள் திருடியமையால் பணிநீக்கம்செய்யப்பட்டவர்கள். இவற்றுக்கு பழிவாங்கும் முகமாகவே எமது காப்பகத்திற்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எமது காப்பகமானது பதிவு செய்யப்பட வேண்டுமாயின் ஒருவருடத்திகு இயங்கி இருக்கவேண்டும் பதிவிற்கான அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட்ட நிலையில் இயங்கிவருகின்றது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காப்பக நிர்வாகத்தினரால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், தயவு செய்து ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மாற்றுத்திறனாளிகளது வலியோடு விளையாடாதீர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வலியோடு விளையாடாதீர்கள்
Reviewed by Author
on
May 05, 2018
Rating:

No comments:
Post a Comment