அண்மைய செய்திகள்

recent
-

ஃபோலிக் அமிலம் கர்ப்பகாலத்திற்கு மட்டுமல்ல, உயர் ரத்த அழுத்தத்திற்கும் உகந்தது: சமீபத்திய கண்டுபிடிப்பு -


கர்ப்பிணிப்பெண்களின் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய spina bifida என்னும் முதுகுத் தண்டு சரியாக உருவாகாத ஒரு குறைபாட்டிற்காக ஃபோலிக் அமிலம் பொதுவாக கொடுக்கப்படுவதுண்டு.
ஆனால் தற்போது அதே ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிப்பெண்களுக்கு மட்டுமல்ல உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை கொண்ட அனைவருக்குமே நல்லது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு பக்க வாதம் வருவதற்கான அபாயத்தை 75 சதவிகிதம் குறைக்கும் ஆற்றல் ஃபோலிக் அமிலத்திற்கு உள்ளது.
உயர் இரத்த அழுத்தம் கொண்ட வயது வந்தவர்களுக்கு இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளுடன் ஃபோலிக் அமிலத்தையும் தினமும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு வழங்கி வந்தால் அவர்களுக்கு பக்க வாதம் வருவதற்கான அபாயம் 73 சதவிகிதம் குறையும் என இன்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் பக்க வாதத்தால் பாதிக்கப்படுகிறார், ஒரு ஆண்டுக்கு 100,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
நான்கு ஆண்டுகள் 10,000 பேருக்கும் அதிகமானவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் எடுத்துக்கொண்ட 210 பேர் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில்,
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளுடன் ஃபோலிக் அமிலத்தையும் எடுத்துக் கொண்ட 161 பேருக்கு பக்க வாத பாதிப்பு ஏற்படவில்லை.
இதிலிருந்து ஃபோலிக் அமிலம் உயர் இரத்த அழுத்தம் கொண்டவரின் அபாயத்தை 5.6 சதவிகிதத்திலிருந்து 1.8 சதவிகிதமாக குறைப்பது நிரூபணமாகியுள்ளது.
அதே நேரத்தில் இந்த வகை கண்டுபிடிப்பு, அதிக homocysteine உடையவர்களுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான இரத்த தட்டுகள் ( platelet ) உள்ளவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
ஃபோலிக் அமிலத்தின் இன்னொரு பெயர் vitamin B9. இந்த ஆய்வில் உயர் இரத்த அழுத்த பிரச்சினை கொண்ட 10,789 பேர், 45க்கும் 75 வயதுக்கும் இடைபட்ட வயது வந்தவர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் பாதி பேருக்கு தினமும் 10mg enalapril உடன் 0.8mg ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு enalapril மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஃபோலிக் அமிலம் கர்ப்பகாலத்திற்கு மட்டுமல்ல, உயர் ரத்த அழுத்தத்திற்கும் உகந்தது: சமீபத்திய கண்டுபிடிப்பு - Reviewed by Author on May 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.