அண்மைய செய்திகள்

recent
-

நடிகர் சிம்பு.....எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது:


செக்கசிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பலதடைகளை தாண்டி மணிரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளேன்.
நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் சினிமாவிற்கு வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன். நீயெல்லாம் ரஜினியா என்று என்னை கிண்டல் செய்தனர்.

நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது.

எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனால் எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. நான் சின்ன வயதில் இருந்தே இப்படி இருந்து விட்டேன். அதனால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இருந்தும் என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன்.
மாற்றி கொண்டும் விட்டேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.

என் கஷ்டத்தை என் பெற்றோர்களை போல் ரசிகர்களாகிய நீங்களும் நன்றாக புரிந்து கொண்டீர்கள். அதற்கு நன்றி. என் அடுத்தடுத்த படங்கள் வரவிருக்கிறது. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்புடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி" என உருக்கமாக பேசியுள்ளார் சிம்பு.
நடிகர் சிம்பு.....எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது: Reviewed by Author on June 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.