சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதுக்கு தெரிவான கோஹ்லி -
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை பிசிசிஐ ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறும் வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, சீனியர் பிரிவில் ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான ‘பாலி உம்ரிகர்’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதினை 2016-2017, 2017-2018 ஆண்டுகளில், சிறந்த சர்வதேச வீரர் என்ற வகையில் விராட் கோஹ்லி பெற உள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதேபோல் மகளிர் பிரிவில் ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான விருதினை பெற உள்ளனர்.
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதுக்கு தெரிவான கோஹ்லி -
Reviewed by Author
on
June 08, 2018
Rating:

No comments:
Post a Comment