மன்னாரில் நேற்று இரண்டு விபத்துக்கள் ஒருவர் வைத்தியசாலையில்.....படங்கள்
மன்னார் ஜிம்ரோன் நகர் உள்ளக வீதியில் 27-06-2018 நேற்று இரவு 08 மணியளவில் பதுங்கி நின்ற போக்குவரத்து காவல் துறையினர் அந்த உள்ளக வீதியில் உந்துருளியில் பயணித்த 2 பெண் குழந்தைகளின் தந்தையும் கடல் தொழிலாளியுமான இ.இராஜேந்திரன் வயது 54 அவரை உந்துருளியில் விரட்டி சென்று காவல் துறையினர்
காவல் துறையினரின் இந்த செயல் பொது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் போது குறித்த குடும்பஸ்தர் பயணித்த மோட்டர் சைக்கில் வீதிக்கரையில் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதியுள்ளது.இதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காவல் துறையினர் விரட்டிச் சென்று விபத்து ஏற்பட்ட வேளை உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அந்த குடும்பத்தினர் நிலைதான் என்ன.....???
மன்னார் பிரதான வீதிகளிலே போக்குவரத்தினை சீர் செய்யாமல் இந்த உள்ளக வீதிகளில் காவல் துறையினர் மாலை நேரத்தில் கடமையில் ஈடுபடுவதும் சிறப்பான விடையம் தான் இருப்பினும் பொலிசார் மக்களின் பாதுகாப்புக்கான செயல்களில் ஈடுபடவேண்டுமே தவிர பயமுறுத்தும் வகையில் விரட்டிச்செல்லுதல் உயிழப்புக்கள் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபடுதல் ஏற்புடைய செயலல்ல...
- தலைமன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து தாராபுர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மன்னாரில் நேற்று இரண்டு விபத்துக்கள் ஒருவர் வைத்தியசாலையில்.....படங்கள்
Reviewed by Author
on
June 28, 2018
Rating:

No comments:
Post a Comment