தமிழக மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை - இலங்கை வசம் 40 கோடி ரூபாய் பெறுமதியான படகுகள்:
இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை விடுவிக்காததால் தமது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து பின்னர் விடுவித்திருந்தனர்.
எனினும், அவர்களின் 186 விசை, நாட்டுப்படகுகள் காரை நகர், மன்னார், பருத்தித்துறை கடற்கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இப்படகுகளில் 60 படகுகள் கடலில் மூழ்கிவிட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீதமுள்ள படகுகளை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின், தமிழக மீனவர்களுக்கு ரூபாய் 40 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்
தமிழக மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை - இலங்கை வசம் 40 கோடி ரூபாய் பெறுமதியான படகுகள்:
Reviewed by Author
on
June 02, 2018
Rating:

No comments:
Post a Comment