ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரின் மனுவை நிராகரித்தாா் குடியரசுத் தலைவா்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனா். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் 7 பேரையும் விடுதலை செய்ய எதிா்ப்பு தொிவித்த நிலையில் விடுதலை செய்யக் கோாிய மனுவை ரத்து செய்து ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இது போன்ற முக்கியத் தருனங்களில் மத்திய உள்துறை அமைச்சகங்களின் கருத்தை கேட்ட பின்பே குடியரசுத் தலைவா் தனது முடிவை உறுதி செய்வாா்.
தமிழக அரசின் கோாிக்கையும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொள்கையும் ஒத்துப் போகாததால் விடுதலை கோாிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் தமிழக அரசு சாா்பில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோாி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில் இரு முறையும் கோாிக்கை மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரின் மனுவை நிராகரித்தாா் குடியரசுத் தலைவா்
Reviewed by Author
on
June 15, 2018
Rating:

No comments:
Post a Comment